முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரரின் மகள், தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


அதில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது.


வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இரண்டார் நிலை வாரிசுதாரர்கள் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோரிடம், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை எடப்பாடி கே.பழனிச்சாமியின் பல செயல்பாடுகள் அவமானத்தையே தொடர்ச்சியாக அவருக்குத் தந்து வருகிறது.


சென்னை உயர் நீதிமன்றம் வேதா நிலையம் அரசுடமை ஆக்கியது செல்லாது என்று சொல்லி விட்டது.


அதை விட இதற்காக செலவான பணத்தை எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் இருந்து தற்போதய திமுக அரசு வசூலிக்க வேண்டும். என்ற கோரிக்கை வருகிறது


இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில், 'வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு? ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது,' எனக் கூறி, 3 வாரங்களில் வாரிசுதாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அவரது அண்ணன் வாரிசுகளுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். இந்த சொத்துக்களை நினைவில்லமாக மாற்றிய எடப்பாடி கே.பழனிச்சாமியின் அரசு ஆணை செல்லாது. இது உச்சநீதிமன்றம் மேல் முறையீடு வரை செல்லுமா, அல்லது உடனடியாக அமலாகுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா