ஓசூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் இலஞ்ச ஊழல் சோதனையில் இரண்டு கோடிக்கு மேல் சிக்கியது.

 ஓசூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில்  இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் அதிரடி சோதனை.


ஓசூர் நேருநகரில் வசித்து வரும் வேலூர் மண்டல பொதுப்பணித்துறை  தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளர் சோபனா வீட்டில் இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில்  2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்த நிலையில் 38 சவரன் தங்க நகைகள், 11 வங்கிக் கிளையின் கணக்குகள், வங்கி பெட்டக லாக்கர் சாவி மற்றும் ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி 13 சொத்து  ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து மக்கள் இந்த ஊழல் பெருச்சாளிகளைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்த நிலையில் மேலும் விபரங்கள் வருமாறு :               


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரைச் சேர்ந்த 57 வயதான ஷோபனா.  வேலூர் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலுள்ள வடமண்டல தொழில்நுட்பக் கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.கடந்த, செவ்வாய்க்கிழமை இரவு ஒருவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் இலஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரிடம் பிடிப்பட்டார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் பணிகளை ஆய்வு செய்வது போன்றவை இவரது பணி.

மண்டல செயற்பொறியாளர் ஷோபனா இலஞ்சம் வாங்குவதாக வேலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததனைத் தொடர்ந்து வேலூர் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இரவிலிருந்து இரகசியமாக கண்காணித்ததில் வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையிலுள்ள ஒரு ஹோட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தபோது  அங்கு சென்ற இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக அவரது காரைச் சோதனையிட்டதில் ரூபாய்.5 லட்சம் பணமிருந்தது. இந்தப் பணத்திற்கு கணக்கு இல்லாதது குறித்து விசாரணை செய்து வழக்குப் பதிவும் செய்தனர். மேலும்  பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியுள்ள அறையில் சோதனை நடத்தி. அங்கு கட்டுக்கட்டாக ரூபாய்.15 லட்சத்து 85 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர் அங்கிருந்த ரூபாய் .3.92 லட்சத்திற்கான காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலகம் சம்பந்தமான 18 ஆவணங்கள் ஷோபனாவின் அறையிலிருந்தன. அவற்றையும் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து ஓசூரிலுள்ள ஷோபனாவின் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பணமும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்.   38 சவரன் தங்க நகைகள்,11 வங்கிக் கிளையில் கணக்குகள், வங்கி பெட்டகத்தின் லாக்கர் சாவி, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி மற்றும் 13 சொத்து ஆவணங்களையும் ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். வங்கிக் கணக்குகள் வங்கி லாக்கர்களில் உள்ள பணவிவரம் குறித்தான விசாரணையையும் தொடர்ந்து நடந்து வருகிறது இந்த ஊழல் பெருச்சாளி பிடிபட்ட நிலையில் இன்னும் பலர் விரைவில் சிக்குவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா