மேற்கு வங்க அரசியல் நகர்வில் சமாதானத் தூதர் டாக்டர் சுவாமி

டெல்லி அரசியலில் வரப்போகும் மாற்றங்கள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்தார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி நேற்று மாலை சந்தித்து பேசினார்.


டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தங்கியுள்ளார். மமதா பானர்ஜியை ஹரியானாவின் அசோக் தன்வார், பீகாரின் பவன் வர்மா, டெல்லியின் கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து ஹரியானா, டெல்லி, பீகாரிலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் களத்தில் தற்போது இறங்கியது.


மூன்று வேளாண்மை சட்டங்களும் வாபஸ் மத்திய அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை மமதா பானர்ஜி சந்திக்க வாய்ப்பு. சந்திப்பின் போது மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்து வலியுறுத்துவும், பி.எஸ்.எப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் வரம்பு எல்லை அதிகரிப்பு தொடர்பான அதிருப்தியையும் மமதா பானர்ஜி வெளிப்படுத்துவார் எனத் தகவல்கள்.வரும் நிலையில்


மமதா பானர்ஜியை பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வீராட் ஹிந்து சங்க தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி  சந்தித்துப் பேசினார் அவரை மம்தா பானர்ஜி வரவேற்றார். மத்திய அரசை அண்மைக்காலமாக அத்தனை பிரச்சனைகளிலும் உள்ளிருந்து விமர்சித்து வரும் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. முதல்வர் மமதாவுடனான சந்திப்பு டெல்லி அரசியலில் பல அரசியல் யூகங்களையும் பெரும் அரசியல் எதிர்பார்ப்பையும் கேள்விகளையும் எழுப்பிமிருக்கிறது. டாக்டர் 


சுப்பிரமணியன் சுவாமியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. மேலும் உரோமில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் மமதா பானர்ஜி பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் தடுத்தார்? எந்த விதிகளின் படி அமித்ஷா இப்படி தடுத்தார் என சரமாரி கேள்விகளை எழுப்பியிருக்கிறார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி.


இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் எனவும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார் அரசியல் சாசனத்தின்படி வெளிநாடு செல்லும் உரிமை  அடிப்படை உரிமை. அப்படி இருக்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி வெளிநாடு செல்வதை ஏன் தடுக்க வேண்டும்? இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு மமதா பானர்ஜிக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க ஆளுநருடனும் சந்திப்பு

பொருளாதார நிபுணரான டாக்டர் சுவாமி கருத்து தான் சார்ந்த மேலிடத்திலிருந்து வரும் கருத்தாகவே பார்க்கப் படுகிறது அந்த வகையில் அவர் குறிப்பிடுவது "பொருளாதாரம், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடியின் அரசுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்". என்பதே!.
 மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி அடைந்துவிட்டது.எல்லை பாதுகாப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டி கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது. அது போல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர்.சரி உள்நாட்டு பாதுகாப்பாவது சரியாக இருக்கும் என்றால் அதிலும் காஷ்மீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தனை தோல்விகளை சந்தித்த நிலையில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்" என வினா எழுப்பியுள்ளார்.

இதனிடையே டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியுடன் மனைவியும் செவ்வாய்க்கிழமையன்று மேற்கு வங்க மாநிலத்தின்ஆளுநர் ஜெகதீப் தன்காரை விருந்தினராக கொல்கத்தாவிற்குச்  சென்றிருந்த நிலையில்  தான் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜியை டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமி அரசியல் ரீதியாகச் சந்தித்துள்ளார் என்கிற செய்திகள் அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது எனும் டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்கள். இது முழுக்க முழுக்க அரசியல் நகர்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா