இந்திய கடற்படையின் 15 பி திட்டத்தின் இரண்டாவது கப்பலான மோர்முகாவ் கடல் சோதனைகளுக்கு புறப்பட்டது

இந்திய கடற்படையின் 15 பி திட்டத்தின் இரண்டாவது கப்பலான மோர்முகாவ், கோவா விடுதலை நாளன்று கடல் சோதனைகளுக்கு புறப்பட்டது


2022-ம் ஆண்டின் நடுவில் செயல்பாடுகளை தொடங்க திட்டமிடப்பட்ட பி15பி (P15B) பிரிவை சேர்ந்த இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாவது ரகசிய அழிக்கும் கப்பலான மோர்முகாவ் இன்று தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது.

போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்று நாடு கொண்டாடுவதால், கப்பல் கடலுக்குச் செல்ல மிகவும் பொருத்தமான தேதியாக டிசம்பர் 19 அமைந்துள்ளது.

விடுதலையில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. கப்பலின் பெயரை கடல்சார் மாநிலமான கோவாவுக்கு அர்ப்பணிப்பது இந்திய கடற்படைக்கும் கோவா மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுவாக்குவதோடு, தேசத்தை கட்டமைப்பதில் கடற்படையின் முக்கிய பங்களிப்புக்கு அடையாளமாக திகழும்.

15பி வகை அழிக்கும் கப்பல்கள் கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட்டால் மோர்முகாவ் கட்டமைக்கப்படுகிறது. பல முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த கப்பல் தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் இக்கப்பல் அளித்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்