எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ.30 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய போது கைது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ.30 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய போது கைது.


பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் படமிஞ்சியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான வெள்ளைச்சாமி  கட்டுமானப் பணிகளை செய்ய அனுமதித்து உத்தரவு வழங்கிய நிலையில் வேலை  மேற்கொண்டார்  

இந்த நிலையில் எஸ்.புதூர், உலகம்பட்டி உள்ளிட்ட ஊர்களிலுள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூபாய்.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு. பணிகளைச் செய்ய ஒப்பந்தகாரர் வெள்ளைச்சாமியை அனுமதிக்க எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலரான(கிராம ஊராட்சி) நிர்மல்குமார், என்பவர் ரூபாய் .30 ஆயிரம் இலஞ்சம் முன்பணம் கேட்டதாகவும்.


அவர் கேட்ட  இலஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி, இது குறித்து சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர், பினாப்தலின் இரசாயனம் தடவிய வெள்ளைச்சாமியின்  பணத்தை அவரிடமே கொடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமாரிடம் வழங்குமாறு கூறியதன் பேரில் ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமாரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் அரசு சாட்சி முன்னிலையில் பணத்தை கொடுத்தார். 

அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் மணி மன்னன்,  ஆய்வாளர் குமாரவேல், உதவி ஆய்வாளர் இராஜாமுகமது மற்றும் காவலர்கள்  நிர்மல்குமாரை இலஞ்சப் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர் பின்னர் சோடியம் கார்பனேட்டு இரசாயனப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுபோல மாவட்டம் முழுவதும் இலஞ்சம் தலைவித்தாடும் நிலையில் நடந்த இந்த நடவடிக்கை பலர் பாராட்டும் படி உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்