மன்னார்குடி தனித் துணை ஆட்சியர் பவானி 7 ஆண்டுகளில் 306 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக திருச்சிராப்பள்ளி இலஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தில் வசித்து வரும் பவானி, ஆவணங்கள் மோசடி செய்வதில் மிகவும் கைதேர்ந்த ஊழல் வாதி என்பது நாமறிந்த உண்மை வட்டாட்சியர் பணி செய்த காலத்தில்
தற்போது மன்னார்குடி தனித் துணை ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் மீது தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர். அவருக்குச் சொந்தமாக திருச்சிராப்பள்ளியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மன்னார்குடி தனித் துணை ஆட்சியர் பவானி 7 ஆண்டுகளில் 306 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவும் செய்துள்ள நிலையில். சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைபற்றப்பட்டுள்ளன. தனித் துணை ஆட்சியரான பவானிக்கு, மண்ணச்சநல்லூரில் அலுமினியத் தொழிற்சாலை ஒன்றும், தனியார் பள்ளி ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் தற்போது திருவாரூர் மாவட்ட தனித் துணை ஆட்சியர் பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்
முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாசில்தாராக இருந்த பவானி வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரில் இந்த ரெய்டு நடைபெற்றது.
முன்னாள் தாசில்தார் பவானி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் பவானி. இவர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தனித் துணை மன்னார்குடியில் வசித்து வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அதற்குக் காரணம் இவருக்கு ஸ்ரீரங்கம் மற்றும் மன்னார்குடியில் வீடுகள் ஸ்ரீரங்கம் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பவானி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்றனர். சாரதி நகர் 2வது தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் உடன் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியில் செல்லாதவாறு கதவுகள் மூடப்பட்டன. செல்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை நடைபெற்றது.
பெட்ரோல் பங்க், பள்ளியில் சோதனை
பெட்ரோல் பங்க், பள்ளியில் சோதனை
இதுமட்டுமின்றி பவானிக்கு சொந்தமானது என கூறப்படும் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம்,
மணச்சநல்லூர் சாலையில் உள்ள எஸ்.வி.ஆர். மேல்நிலைப் பள்ளி, அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தாரரும், தற்போதைய திருவாரூர் துணை ஆட்சியருமான பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது அங்குள்ள ஒரு சில ஊழல் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரண்டு உயர்ரக சொகுசுக் கார்கள், 2 பெட்ரோல் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்களும் சோதனையின் போது கைபற்றப்பட்டுள்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைபற்றப்பட்டுள்ளன. இந்த பவானி பல நில உரிமையாளர்களின் நில ஆவணங்களில் மோசடி செய்து அந்த ஊழல் மூலம் சம்பாதித்த நபர் ஆவார்.
கருத்துகள்