உணவில் விஷத்தன்மை உள்ளிட்ட பல கோரிக்கை முன்வைத்து தனியார் நிறுவனப் பெண் தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரிலள்ள செல்லுலர் தொலைபேசி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்


சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுவரும் நிலையில். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. விபரம் வருமாறு : பூந்தமல்லியில் நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷத் தன்மை இருந்ததால் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்த நிலையில், எட்டு பெண்களுடைய நிலை என்னவென்று தெரியாததால் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு ஏழு மணி நேரமாக. இப் போராட்டம் காரணமாக ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் நின்றன. மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் வருவாய் துறை  அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட்ட நிலையில் சமரசம் எட்டப்படாத காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்தார்       மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய ஆட்சியர், சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் காணொளிக் காட்சி தொலைபேசி மூலம் பேசினார். ஆனாலும் அங்கிருந்த பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ''நீங்க உங்க ஃபிரண்ட்ஸ்க்காகத்தான போராட்டம் பண்ரீங்க. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. பப்ளிக்கிற்கு எவ்வளவு இடையூறு  ஏற்படுத்தியிருக்கீங்க தெரியுமா? நியூஸ் பாத்தீங்களா? சரி, சரி விட்டுடுங்க... விஷயம் முடிஞ்சிருச்சு'' என்றார். அப்போது அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலையில் அந்த பெண்கள் இருந்தனர்.        மாவட்ட ஆட்சியர் கூறிய சமாதானம் ஏற்காத நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமே போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலை பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய காரணமாக இருந்த 22 நபர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.      இந்தப் போராட்டங்களுக்கு இதுமட்டுமின்றி வேறு பல காரணங்கள் இருக்கலாம் அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கல்பட்டு செல்லும்  சாலையில் புளியம்பாக்கத்திலும் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அதேபோல் தாம்பரம் செல்லும் வழியில் வடகால் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிழைப்பு தேடி வந்த தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்திருக்கிறோம். எங்களைப் பல்வேறு பகுதியில் இருக்கும் விடுதிகளில் தங்கவைத்திருக்கிறார்கள். எங்களுக்கு முறையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எங்களைக் கொத்தடிமை போல் நடத்திவருகிறார்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் விடுப்புக் கொடுக்க மறுக்கிறார்கள்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இது உணவு விஷத் தன்மை குறித்து நடந்த போராட்டமாக மட்டுமே பார்க்க முடியாது இதில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து தீர்வு காண வேண்டும் இந்த போராட்டம் முன்னெடுப்பு செய்த பெண்கள் சரியான பாதையில் திட்டமிடல் இல்லை என்பது தெரிகிறது.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “உணவு விஷமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் இவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் ஆவலாகத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்