மறைந்த முன்னாள் முதல்வர்ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரித்துறை வழக்குகளில் தீபா, மற்றும் தீபக்கை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவு.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரித்துறை வழக்குகளில் இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, மற்றும் தீபக்கை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவு.


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 1990-91 ஆம் நிதியாண்டு முதல் 2011-12  ஆம் நிதியாண்டு வரை செல்வ வரி பாக்கியாக ரூபாய்.10.12 கோடி செலுத்தவேண்டிய நிலுவையில் உள்ளதாக வருமானவரித் துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. 


இதுதவிர வருமானவரி பாக்கியும் உள்ளது. 

இதற்காக  செல்வி ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம்  இல்லம், வேதா நிலையம் மற்றும்  ஹைதராபாத் இல்லம் உள்ளிட்ட நான்கு  சொத்துகளையும் வருமானவரித் துறை ஏற்கனவே முடக்கி உத்தரவிட்டுள்ள நிலையில் செல்வ வரி மற்றும் வருமானவரி தொடர்பான கணக்கு விவரங்களை செவ்வி ஜெ. ஜெயலலிதா ஆண்டுதோறும் முறையாக சமர்ப்பிக்கவில்லை  என வருமானவரித் துறை கடந்த 1997-ஆம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது.


அதை எதிர்த்து செவ்வி ஜெ. ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது. இந்த நிலையில் 

 தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை சார்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு உகந்தவையா என்பது தொடர்பான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது வருமானவரித் துறை சார்பில் வக்கீல் கார்த்திக் ரங்கநாதன் ஆஜராகி, " செல்வி.ஜெ. ஜெயலலிதா செலுத்தவேண்டிய செல்வ வரி மற்றும் வருமானவரி நிலுவை தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், தற்போது செல்வி.ஜெ.ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இந்த வழக்கில் அவருடைய சட்டப்பூர்வ இரண்டாம் தரப்பு வாரிசுகளான ஜெ.தீபா, மற்றும் ஜெ.தீபக் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இணைக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்