இலவச மனைப்பட்டா வழங்க ரூபாய் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது.

இலவச மனைப்பட்டா வழங்க ரூபாய் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் சயமபுரம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள இலால்குடி வட்டம் கண்ணாகுடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி கூலித் தொழிலாளி. இவர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி இலால்குடி வட்டம் கண்ணாகுடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் மலர்கொடியிடம் விண்ணப்பித்த நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்க ரூபாய் இரண்டாயிரம் லஞ்சம் தர வேண்டுமென மலர்கொடி கேட்டதால் இலஞ்சம் தர விரும்பாத  பெரியசாமி, இது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.


அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி நேற்று பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் இரண்டாயிரம் பெரியசாமியின் பணம், கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடியிடம் வழங்கினார்.அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர் இலஞ்சப் பணம் பெற்ற கையுடன்  மலர்கொடியைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்