புதுக்கோட்டை மரம் இராஜாவுக்கு மக்கள் உரிமை கூட்டணி சார்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது

மக்கள் உரிமைக் கூட்டணி என்ற பெயரில் கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட நபர்கள் நடத்திய பொது நிகழ்ச்சி சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள ஜெகன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. அதில் சமூக அக்கறையுடன் பொது திட்டம் கொண்டு சேவை செய்துவரும் நபர்களை குழு அமைத்து தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.


அப்படி புதுக்கோட்டை நகர் மரம் அறக்கட்டளை சார்பில் பல இலட்சம் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருவது குறித்து அறிந்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது .இயற்கையைக் காக்க நடக்கும் போராட்டத்திற்கு தன்னுடைய பங்காக பழமையான மரங்களை வளர்த்து ஆவணப்படுத்தும் வேலையைச் செய்து வரும் மரம் இராஜா விருது பெற்றார். அவர்  கூறுகிறார். "மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கியக் குறியீடுகளாகின்றன.

உதாரணமாக நோர்ஸ் மற்றும் ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம். ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக உள்ளவை மரங்களே மரங்களால் உருவாக்கப்படுகின்ற ஆக்சிஜன் தான் மனிதனுடைய பிராண வாயு. மரங்கள் காற்றை தூய்மை செய்கின்றன. மிருகங்கள் பறவைகள் என அனைத்து உயிர்களையும் வெயிலிலிருந்து காக்க நிழலையும் தருகின்றன.தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டினாலும் மனிதத் தேவையின் பொருட்டு அதிகரித்த மோட்டார் வாகன பயன்பாட்டினாலும் மாசாக்கப்படும் இந்த சுற்றுச்சூழலை சுத்தம் செய்பவை மரங்களே ஆகும்..இதை உணர்த்துவதற்காகவே “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என எமது முன்னோர்கள் பொன்மொழி மூலம் அறிய தந்துள்ளனர்.

தற்காலத்தில் நாம் உணர்கின்ற அதிகப்படியான வெப்பத்திற்கு காரணம் நாம் மரங்களை அழித்தமையால் ஏற்பட்ட நிழலின்மையே ஆகும்.

மரங்கள் பறவைகள், விலங்குகள் போன்றவற்றிற்கு புகலிடமாக விளங்குகின்றன. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக நீரானது ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை புரிகின்றன. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன. சிறந்த மருந்துகளை உருவாக்க மூலிகை பொக்கிஷங்களாகவும் காணப்படுகின்றன. அதை மீண்டும் பூமியில் தழைக்க வைக்கும் முயற்சியில் மரம் இராஜா முன்னிலை வகிக்கும் இயற்கை நலன் காக்கும் நபர் என்பதால் பலரும் பாராட்டி விருதுகள் வழங்கும் நிலை. அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த மக்கள் உரிமை கூட்டணி வழங்கிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் விருது வழங்கிய நிகழ்வுமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்