தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழ்நாடு அரசின் மாநில கீதமாக அறிவித்து அரசாணை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழ்நாடு அரசின் மாநில கீதமாக அறிவித்து தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போதில், இனி அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசின் அரசாணை வெளிவந்துள்ளது.

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சி துவங்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அப்போது, இசைவட்டு மற்றும் ஒலிபெருக்கிகளில் ஒலிப்பதற்குப் பதிலாக வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.  தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் மட்டும் எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்படுகிறது


.இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டுமென்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவுமில்லை என உயா்நீதிமன்றம் வழங்கிய ஒரு உத்தரவு வந்த நிலையில்

இது அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம் உறுதியாக அமலாக்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, 55 வினாடிகளில் பாடப் படவும் இசை மூலம் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றன் நடையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பா இசைப்பதை அணைத்து மக்கள் ஊக்குவிக்க வேண்டுமெக் கூறப்பட்டுள்ளது.


எனவே, இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பா இசைக்கப்படும் போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டுமென்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என சட்டப்படியான உத்தரவு இல்லை: என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்த நிலையில் தற்போது அரசு அரசாணை மூலம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல். தான். தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ள நிலையில் அரசின் கொள்கை முடிவு அரசாணை மூலம் வெளியிடப்பட்டது


சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த 24 ஜனவரி 2018 ல் நடந்த தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாகக் கூறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்து கோஷம் எழுப்பியதாக அப்போது நாம் தமிழ் கட்சியைச் சேர்ந்த இளங்கோ உட்பட பலர் மீது இராமேஸ்வரம் கோவில்  காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

இந் நிலையில் இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி இளங்கோ என்பவர் சென்னை உயர் நீதிமன்றம மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல். தேசிய கீதமல்ல. தமிழ் தாய் வாழ்த்துப் பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவிதமான சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவுகள் இல்லை. அதே நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். உண்மையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


அதே நேரத்தில் இவ்வாறு எழுந்து நின்று தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல.

ஆன்மிகவாதிகள் பிராத்தனையின் போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும் போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதால் பலனில்லை. வழக்கு இரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

என்  நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் சிறப்பு உற்று நோக்கினால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி உரிய மரியாதை தமிழுக்கு வரும் இந்த சிறப்பு வாய்ந்த அரசாணை வரவேற்கத்தக்கது.         சுதந்திரம் பெறப்படும் முன் சமஸ்தானத்தின் (இந்தியா) வின் தற்போதுள்ள கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவில் பெருமாள் பிள்ளை மாடத்தி அம்மாள் தம்பதியருக்கு 1855-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த சுந்தரம் பிள்ளை என்ற சுந்தரனார் இயற்றிய      மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

" நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்