இந்திய கடற்படை கப்பல்கள் . கேரள அரசு நடத்திய சர்வதேச தண்ணீர் திருவிழாவில் பங்கேற்க. பேப்பூருக்கு வந்தன

கேரளாவின் பேப்பூருக்கு வந்தன இந்திய கடற்படை கப்பல்கள் . கேரள அரசு நடத்திய சர்வதேச தண்ணீர் திருவிழாவில் பங்கேற்க, இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் சர்தா மற்றும் ஐஎன்எஸ் கப்ரா ஆகிய போர்க்கப்பல்கள்


பேப்பூர் துறைமுகத்துக்கு வந்தன. கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நடந்த விழாவில், இந்த கப்பல்கள் பங்கேற்றன.  விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டன.   பேப்பூர் கடற்கரையில் கடற்படையின் இலகு ரக ஹெலிகாப்டர் தேடுதல் மற்றும் மீட்பு பணி குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  இரவில் இந்த போர்க்கப்பல்கள் மின்னொளியில் ஜொலித்தன. இதை பேப்பூர் கடற்கரையில் இருந்த மக்கள் கண்டு ரசித்தனர். கடலோர பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த போர்க்கப்பல் பயணத்தின் நோக்கம்.  பேப்பூர் துறைமுக கழகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.  போர்க்கப்பல்களை கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் .வேணு வாசுதேவன் ஆகியோர் உட்பட  பொது மக்கள் சுமார் 3,000 பேர் பார்வையிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்