சிறந்த நிர்வாகத்திற்கு சிறந்த சட்டமன்றங்கள் தேவை என குடியரசுத் துணைத்தலைவர்

சிறந்த நிர்வாகத்திற்கு சிறந்த சட்டமன்றங்கள் தேவை என குடியரசுத் துணைத்தலைவர் கூறியுள்ளார்


மக்களுக்கு நிர்வாகத்தின் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான சிறந்த நிர்வாகத்திற்கு சிறந்த  சட் டமன்றங்கள் தேவை என குடியரசுத்  துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியுள்ளார். கேள்வி நேரம், குறுகிய நேர விவாதங்கள், மசோதாக்கள் மீதான விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள், கொள்கைகள், பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றின் செயலாக்கம் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்கலாம் என்று அவர் கூறினார். இதற்கு, மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமான முறையில், செயல்படும் சிறந்த


நாடாளுமன்றவாதிகள் அவசியம் என திரு நாயுடு குறிப்பிட்டார்.

தொடர் இடையூறுகள், அடிக்கடி சபைகளை ஒத்திவைக்க நேரிடும் செயல்கள் ஆகியவற்றால் நாடாளுமன்றங்களின் செயல்பாடு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது என்று திரு நாயுடு கவலை தெரிவித்தார். செயலற்ற சட்டமன்றங்கள் விட்டுக்கொடுத்துவிடும்  நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் முடிவடைந்த குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் 61% நேரம் அமளியால் வீணானதாக அவர் குறிப்பிட்டார்.  தனது கடமையை சரிவர நிறைவேற்றாத ஒரு எம்பிக்கோ அல்லது  எம்எல்ஏவுக்கோ நிர்வாகத்தைக் கேள்வி கேட்கும் தார்மீக உரிமை கிடையாது என குடியரசுத்  துணைத்தலைவர் கூறினார்.

சிறந்த ஆளுகை தினமாக கொண்டாடப்படும், மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு சென்னையில் குடியரசுத்  துணைத்தலைவர் மரியாதை செலுத்தினார். சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட வீடியோ செய்தியில், வாஜ்பாய் இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவர் என்றும், இந்திய அரசியல் வானில் ஒளிரும் தாரகைகளில் ஒருவர் என்றும் திரு நாயுடு புகழாரம் சூட்டினார்.

மக்களின் நலனுக்காக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் வாஜ்பாய் நம்பிக்கை கொண்டிருந்தார் என திரு நாயுடு நினைவுகூர்ந்தார்.

சிறந்த நிர்வாகம் என்பது, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சேவைகளை ஆற்றுவதில் நிர்வாகப் பற்றாக்குறை நிலவுவதாக கூறினார். இந்த மெத்தனம் காரணமாக, நேரம் விரையமாவதுடன், செலவும் அதிகரிப்பதாகவும், இது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். முன்னுரிமை அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வங்கிக் கணக்குகளைத்  தொடங்கி, பணத்தை அதில் நேரடியாக வரவு வைப்பது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையாளுவது, முடிவு எடுப்பதில் மக்களைப் பங்கேற்க வைப்பது என நிர்வாகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளைக்  குடியரசு துணைத்தலைவர் விவரித்தார். இந்த முன்முயற்சிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நிர்வாகத்தின் தரத்தை முன்னேற்ற, குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய சிறந்த மக்கள் சாசனங்களைப்  பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நமிழக ஆளுநர் திரு ஆன்.என்.ரவி கலந்து கொண்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்