வியட்நாம் நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

வியட்நாம் நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.


வியட்நாம்  சோஷலிச குடியரசின் தேசிய சபை தலைவர் திரு வியோங் தின்ஹ் ஹியூ தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (டிசம்பர் 19, 2021) சந்தித்தது‌


இந்தியாவுக்கு வருகை தந்த குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவும் வியட்நாமும் தற்காலத்தில் தலைவர்கள் மட்டத்தில் சிறப்பான உறவுகளை கொண்டிருப்பதாக கூறினார். மகாத்மா காந்தி மற்றும் அதிபர் ஹோ சி மின்னின் கொள்கைகளை நமது மக்கள் மதிக்கிறார்கள். அரசியல் ஈடுபாடு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, வளர்ச்சி கூட்டணி, பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு  இடையேயான உறவுகள் என நமது விரிவான இருதரப்பு யுக்தி சார்ந்த உறவுகள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து உள்ளன.

2018-ம் ஆண்டு தாம் வியட்நாம் பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த குடியரசுத் தலைவர், வியட்நாமின் செழுமையான கலாசார பாரம்பரியம் மற்றும் நமது வலுவான பௌத்த தொடர்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கிடையிலான பண்டைய நாகரீக பரிமாற்றங்களை தாமே நேரில் கண்டதாக தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கும் வியட்நாமிற்கும் இடையிலான பொருளாதார ஈடுபாடு சாதகமான திசையில் தொடர்ந்து செல்வதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டு சீராக வளர்ந்து வருவதையும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு பங்களிக்கும் என்று அவர் கூறினார்.

பலதரப்பு மன்றங்களில் இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றிப் பேசிய அவர், ஐ.நா மற்றும் பிற மன்றங்களில் நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் பெரும்பான்மையான வளரும் நாடுகளுக்கு குரல் கொடுத்துள்ளன என்றார். சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படும் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு பங்களிக்க இந்தியாவும் வியட்நாமும் ஆசியானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்