சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு.
ஊடகம் இன்று மிகப் பெரிய பரிமாணங்களை அடைந்திருக்கிறது. சந்தையில் முந்தி நிற்கிற நிறுவனங்களாக மட்டுமல்லாமல், இணையதள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற சிறிய ஊடக முயற்சிகள் இன்று பெரிய கவனத்தைப் பெறுகின்றன. பெருநிறுவனங்களால் வெளியேற்றப்பட்டவர்கள் திகைத்துத் தேங்கிவிடாமல், தன்முனைப்போடு காணொளி விவாதங்கள், உரையாடல்கள் என அடையாளம் பதித்துவருகிறார்கள். அவர்களையும், இதர பல்வேறு சிறு ஊடக இல்லங்களைச் சார்ந்தோரையும் வரவேற்கிற இடத்தில் வாரியம் இருப்பதே ஊடக வளர்ச்சியின் புத்தாக்கப் பரிமாணத்தோடு இணைந்திருக்கச் செய்யும்.
2021-22 ஆம் ஆண்டில் சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்பில் "தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
அதைச் செயல்படுத்த பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்க அரசு ஆணை வந்துள்ளது.
அதில் பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சரைத் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக ஏழு நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக ஆறு நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படுமெனவும்.
பத்திரிகையாளர் நல வாரியத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு சார்பில் வெளியிடும் விளம்பரங்களின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் குறித்த சதவீதம் தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து தற்போது ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே பத்திரிகையாளர் நலவாரியப் பணிகளையும் மேற்கொள்ளவும்.
நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவை களைத்து, பத்திரிகையாளர் நல வாரிய புதிய உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் ., உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளித்திடும் வகையில், 'பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு டிசம்பர்.,03 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு / கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது.போலிப் பத்திரிகையாளர்கள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாக தமிழ்நாடு பத்திரிகை கவுன்சில் ஒன்றை மாநில அரசு அமைக்க வேண்டுமென ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதற்கு அரசின் எதிர்வினை என்ன என்ற கேள்வி அப்போது எழுந்தபோது, உத்தரவு முழு விவரம் கிடைத்த பிறகு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படுமென செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் நல்லதொரு எதிர்வினை போல, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படுவதாக செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அமைக்கச் சொன்ன கவுன்சிலுக்கும், அரசு அமைக்கவுள்ள வாரியத்திற்கும் குறிப்பிடத்தக்கதொரு வேறுபாடுகளிருக்கிறது. பத்திரிகை எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது அல்லது பார்வையாளர்கள் பதிவு என்ற எண்ணிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர்களைப் பாகுபடுத்துவதாக, 10,000 படிகளுக்குக் குறைவாகப் புழங்குகிற ஏடுகளில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான அங்கீகாரத்தை மறுப்பதற்கு இட்டுச் செல்வதாக கவுன்சிலுக்கான ஆணை இருக்கிறது. வாரியமோ, சிறு பத்திரிகையாளர்களுக்கும் அங்கீகாரம், பாதுகாப்பு, சட்ட உரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதாக வருகிறது.
ஊடகவியலாளர்களது மாநாடுகளில், அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகளில் இத்தகைய வாரியம் அமைப்பதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு ஜூலையில் சட்டமன்றத்தில் இதே கோரிக்கை வந்தபோது, அப்போது செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் ராஜு, வாரியம் அமைப்பது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படுமென அறிவித்தார். அப்படியொரு குழு அந்த அரசால் அமைக்கப்பட்டதா, அது தனது அறிக்கையை அளித்ததா, அளித்தது என்றால் அதில் கூறப்பட்டிருப்பது என்ன என இதுவரை எதுவும் தெரியாது. இன்று தமிழகத்தின் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அந்தக் கோரிக்கையை நிறைவேறியிருக்கிறது. செய்தி விளம்பரங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அறிவிப்பில் மிகவும் முக்கியமானது, இளம் பத்திரிகையாளர்கள் தங்களது மொழியாற்றல் உள்ளிட்ட தொழில்சார் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் பெறுவதற்கு நிதியுதவி செய்யப்படும் என்பதாகும். புகழ்பெற்ற ஊடகவியல் கல்வி நிறுவனங்களான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் போன்றவற்றில் அந்தப் பயிற்சி அளிக்கப்படும். உலக சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, செய்திகளையும் கருத்துகளையும் வழங்குகிற ஊடகப் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அதற்கான புத்தாக்கத் திறன்களில் பின்தங்கிவிடாமலிருப்பது இன்றைய காலத்தில் ஒரு முக்கியத் தேவையாகும்.
தலைவர்கள், அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், நட்சத்திரங்கள், சாமானிய மக்களின் வாழ்வியல் போன்றவை செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றைக் காணலாம். அதிகாரப்பூர்வ சந்திப்பு முடிந்த பிறகு மூத்த பத்திரிகையாளர்களைச் சுற்றி குறிப்பாக பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைச் சுற்றி அதிகாரப்பூர்வமற்ற செய்தியாளர் சந்திப்புகள் நடக்கும். அவர்கள் கூறுகிற விளக்கங்களைக் கேட்டு இளையவர்கள் புதியவர்கள் தங்களது செய்திகளை எழுதுவார்கள். தாங்கள் நேரடியாகக் கேட்டதைக்கொண்டே செய்தியாக்குகிறவர்கள் ஓரளவு தான் உண்டு. அந்த மூத்தவர்கள் மறைக்காமல் பேட்டியைப் பகிர்வார்கள் இருந்தாலும், தங்கள் கண்ணோட்டத்திலேயே சொல்ல வாய்ப்புண்டு.
தகவலைத் தகவலாகச் சொல்கிற உரிமையைப் போலவே, அதைத் தனது கண்ணோட்டத்தில் சொல்கிற உரிமையும் ஊடகவியலாளருக்கு உண்டு. அவ்வகையில், இளம் பத்திரிகையாளர்கள் தங்கள் மொழியறிவு, தகவலறிவு போன்றவற்றுடன், சுயமான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டாக வேண்டும். இதற்குப் பயிற்சியளிக்கிற ஏற்பாடுகளை ஊடகவியலாளர் சங்கங்கள் மேற்கொள்ளலாம் என்று அவ்வப்போது பேசப்பட்டு, தொடக்க முயற்சிகள் சிறு அளவில் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் பெரிய அளவுக்கு அது செயல்வடிவம் பெறவில்லை. தமிழக அரசு அமைக்கப்போகும் வாரியம் அந்தச் செயல்வடிவத்தை உருவாக்குவது ஆக்கப்பூர்வமானது.
பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் இந்த வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும். பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல, முன்களப் பணியாளர்களாகப் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்த குடும்பங்களுக்கு இது புதுத்தெம்பளிக்கும்.
பண்பாட்டுத் தளத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அடுத்தடுத்த நல்ல அறிவிப்புகள் அரசிடமிருந்து வருகின்றன. மூத்த இலக்கியவாதிகளைக் கவுரவிப்பது உள்ளிட்டவை அத்தகையதுதான். இதையெல்லாம் செய்தியாக்கி மக்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிற ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் வகையில், கலைஞர் எழுதுகோல் விருது, ரூபாய்.5 லட்சம் தொகையுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக அமைக்கப்படும் நல வாரியம் முறையாகக் கூடுவது, ஊடகவியலாளர்களது பல்வேறு பிரச்சினைகளை அது ஆய்வு செய்வது, அதன் பரிந்துரைகளை அரசு ஏற்றுச் செயல்படுத்துவது ஆகியவை தொடர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது நல வாரியம் நல்ல வாரியமாக முத்திரை பதிக்கும். இந்த வெற்றி வழக்கு மன்றத்தில் முன்னெடுப்பு செய்து தீர்வுகள் கண்ட பத்திரிகையாளர்களையும் மற்றும் தற்போதய தமிழக அரசையும் சீரும் சிறப்பும் சேரும்.
கருத்துகள்