பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

2021-26-க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


மாநிலங்களுக்கான மத்திய உதவி ரூ.37,454 கோடி உட்பட ரூ.93,068 கோடி ஒதுக்கீடு

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரூ.93,068 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், 2021-26-க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவியாக ரூ.37,454 கோடி வழங்கவும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட காலத்தில், 2016-21 பாசன மேம்பாட்டிற்காக மத்திய அரசால் கடன் வழங்க ரூ.20,434.56 கோடிக்கும் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்புத் திட்டமான விரைவுப்படுத்தப்பட்ட பாசனப்பயன் திட்டம் நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.  இந்தத் திட்டத்தின் கீழ் 2021-26 காலத்தில் கூடுதலாக 13.88 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்