இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், போலந்து மற்றும் மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும், போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகத்திற்கும், போலந்தின் சட்ட அங்கீகாரம் பெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  அமைச்சரவை  இன்று ஒப்புதல் அளித்தது.  உறுப்பினர் நிர்வாகம், தொழில் நெறிமுறை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொடர்ச்சியான தொழில் முறை மேம்பாடு,  தொழில் முறை கணக்குக்கான பயிற்சி, தணிக்கைத் தரத்தைக் கண்காணித்தல், கணக்கிடுதல் அறிவில் முன்னேற்றம், தொழில் முறை மற்றும் அறிவுசார் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையிலான சிறப்பு அம்சத்தில் இந்திய பட்டயக் கணக்காளர்கள், கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவீனப் பயிற்சி வழங்க போலந்தில் வாய்ப்புகளை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.  ஐரோப்பாவில் தடம் பதிப்பதை இது வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருஅமைப்புகளின் உறுப்பினர்களுக்கு பரஸ்பரம் பயன்தரும் உறவை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.   மேலும்  இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஏகபோகத்திற்கு எதிரான சட்டம் மற்றும் கொள்கையை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான ஒத்துழைப்பு தொடர்பான இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  
சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் போட்டிக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்குத் தீர்வு  காண்பதும், இந்திய போட்டி ஆணையத்தால் போட்டிச்சட்டம் 2002-ன் அமலாக்கத்தை மேம்படுத்தவும், போட்டிக் கொள்கை பற்றிய புரிதலை அதிகப்படுத்தவும், திறன் கட்டமைப்புக்கும், தூதரக ரீதியிலான பயன்களைக் கொண்டு வரவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்