தேசிய குடிநீர் பாதுகாப்பு முன்னோடி திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்.

தேசிய குடிநீர் பாதுகாப்பு முன்னோடி திட்டங்கள்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்.


நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2024-ம் வருடத்திற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை 2019 ஆகஸ்ட் முதல் மாநிலங்களுடன் இணைந்து இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் 2018-19-ல் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பங்காக ரூ 180.99 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ 168.92 கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது,. மாநில அரசு பங்கு ரூ 363.02 கோடி ஆகும். 

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2019-20-ல் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பங்காக ரூ 373.87 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ 114.58 கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது,. மாநில அரசு பங்கு ரூ 99.14 கோடி ஆகும்.  

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2020-21-ல் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பங்காக ரூ 921.99 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ 576.97 கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது,. மாநில அரசு பங்கு ரூ 399.57 கோடி ஆகும்.குடிநீருக்கான அணுகல்நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளவாறு, 13.12.2021 நிலவரப்படி, நாட்டில் உள்ள 17.01 லட்சம் கிராமப்புற குடியிருப்புகளில், 13.46 லட்சம் (79.11%) பகுதிகளில் (மக்கள் தொகையில் 79.44%), ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டருக்கும் அதிகமான குடிநீர்  வழங்கும் வசதி உள்ளது.

3.18 லட்சம் (18.72%) கிராமப்புற குடியிருப்புகள் (18.80% மக்கள்தொகை) ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டருக்கும் குறைவான குடிநீர்  வழங்கும் வசதி உள்ளது. 1.76% மக்கள் தொகை கொண்ட 0.37 லட்சம் (2.17%) கிராமப்புற குடியிருப்புகளின் தண்ணீரின் தரத்தில் சிக்கல்கள் உள்ளன.


தமிழ்நாட்டில் மொத்தமுள்ள கிராமப்புற குடியிருப்புகளின் எண்ணிக்கை 79,329 ஆகும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டருக்கும் அதிகமான குடிநீர் வழங்கும் வசதி உள்ள கிராமப்புற குடியிருப்புகளின் எண்ணிக்கை 57,639 ஆகும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டருக்கும் குறைவான குடிநீர் வழங்கும் வசதி உள்ள கிராமப்புற குடியிருப்புகளின் எண்ணிக்கை 21,690 ஆகும். தண்ணீரின் தரத்தில் சிக்கல்கள் உள்ள கிராமப்புற குடியிருப்புகள் எதுவும் இல்லை.தண்ணீர் பரிசோதனை ஆய்வகங்கள்: தமிழ்நாட்டில் மொத்தம் 113

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2024-ம் வருடத்திற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தரமான, போதுமான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை 2019 ஆகஸ்ட் முதல் மாநிலங்களுடன் இணைந்து இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தங்களின் வருடாந்திர ஒதுக்கீட்டில் 2% வரை நீரின் தரக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாநிலம், மாவட்டம், துணைப்பிரிவு மற்றும்/அல்லது தொகுதி அளவில் ஆய்வகங்களை மேம்படுத்தி தேசிய பரிசோதனை ஆய்வகங்களின் வாரியத்தின் (என்ஏபிஎல்) அங்கீகாரம் பெற மாநிலங்கள்/யூனியன்  பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு , 13.12.2021 நிலவரப்படி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிலை குடிநீர் தர  பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 2012  ஆகும்.

தமிழ்நாட்டில் மாநில அளவில் 1 ஆய்வகமும் , மாவட்ட அளவில் 31 ஆய்வகங்களும், வட்ட/துணை வட்ட அளவில் 81 ஆய்வகங்களும் என மொத்தம் 113 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. புதுச்சேரியில் மாவட்ட அளவில் 2 ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்