மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதில்

வரதட்சணை தடை சட்டத்தால், வரதட்சணை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன : மக்களவையில் தகவல்


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:


தேசிய குற்ற ஆவணக்  காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம்ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில், வரதட்சணை  மரணங்கள்  தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை  தடை  சட்டத்தின் கீழ்  குற்றங்கள் குறைந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன.அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கான விதிமுறைகள்மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அங்கன்வாடி  சேவைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமிக்கின்றன. விதிமுறைகளின்படி நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் மாநில அரசு அமைத்துள்ள தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிப்படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதியாகும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயதாகும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை மத்திய அரசு அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.4,500-ம் மினி அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,500-ம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.2,250 மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. 

இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் எழுத்து  மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.குழந்தை ஆபாசபடங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, சைபர்  ஆபாச படங்கள் / குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்கள் மீது  மாநிலங்கள் வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைகள், தண்டனை பெற்றவர்கள், விசாரணை முடிவுகள், குற்ற சதவீதம், கைது செய்யப்பட்டவர்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கிய விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆன்லைன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, பார்ப்பது, பரப்புவது போன்ற குற்றங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் 67B பிரிவின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 

சிபிஐ மூலமாக பெறப்படும் இன்டர்போல் பட்டியலில் உள்ள குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை, மத்திய  அரசு அவ்வப்போது தடை செய்து வருகிறது.

இணையளத்தை பயன்படுத்தும் போது டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்படுத்தி வருகிறது

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வுத் தகவல்களை https://www.infosecawareness.in என்ற பிரத்தியேக  இணையளம் வழங்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்