முன்னாள் அதிமுக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தலைமறைவு குற்றவாளியாக தேடுதல் நடத்தும் எட்டு காவல்துறைத் தனிப்படைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பணி வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகப் புகார் 


தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறைக் குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி என்பவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர பாலாஜியுடனிருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், மற்றும் எஸ்.கே.முத்துப்பாண்டியன் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவருடன் இணைந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  வழக்கு தாக்கல் செய்த நிலையில்


 அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில்,  தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செல்ல உள்ளதால், தள்ளுபடி உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்ட நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதில். காவல்துறை துணை கண்காணிப்பாளர், இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள்,  அடங்கிய 4 தனிப்படைகள் தேடி வருகின்றனர் .சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தள்ளுபடி ஆனவுடன் உடனடியாக சரண் அடைவது தான் அமைச்சராக இருந்த ஒருவருக்கு அழகான நேர்மையான செயல்அவர் அதைச் செய்ய வில்லை

எத்தனை நாட்கள் தலைமறைவாக அவர் இருந்து விட முடியும்? 

 தலைமறைவாக இருப்பவர்களைத் தனிப்படை அமைத்து தேடப்படும் குற்றவாளியாக முன்னால் அமைச்சர் அதுவும் வீராப்புக் காட்டிப் பேசிய ஒருவர்

பொதுவெளிக்கே வரமுடியாமல் எவ்வளவு நாளைக்கு தலைமறைவாக இருந்து விடமுடியும்?         பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்தது, தற்போது தென்காசி குற்றாலம், கேரளாவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து இரண்டு தனிப்படைகள் அங்கு விரைந்துள்ளது.  ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்லுலார் தொலைபேசிகளின் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்த ம் ஆறு தனிப்படைகள் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரைத் தேடி வந்தனர்.  தற்போது மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் மேலும் 2 தனிப்படைகள் என மொத்தம் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் தலைமையிலான நீதிமன்றத்தில் 17 டிசம்பர் 2021 அன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியமிருக்கிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திரபாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும் பொய்ப் புகார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், ''ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நல்ல தீர்ப்பு பெறப்பட்டு அதன்படி மத்திய அரசும் அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும். நெல்லை பள்ளிக்கூட விபத்து உள்ளபடியே அனைவருக்கும் வருத்தத்தை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து உடனடியாக பராமரிக்க வேண்டும்” என்றவரிடம்

 செய்தியாளர் ஒருவர் ராஜேந்திர பாலாஜி தொடர்பாகக் கேள்வி எழுப்ப, ''அது நீதிமன்றத்தினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கருத்து கூற விரும்பவில்லை'' என்றார். ஆனால் முன்னால் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது கடிதத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த நிலையில் அதிமுக பிளவு தெளிவாக தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்