மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு


மனித குலத்தின் அடிப்படை கண்ணியத்தை உயர்த்த வேண்டியது நமது பொறுப்பாகும் என குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். மனித உரிமைகள் தினத்தையொட்டி புதுதில்லியில் அவர், உரையாற்றினார்.

மனித உரிமைகள் பிரகடனம் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரம் உள்ளது என்பதை தெரிவிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.  ஒவ்வொரு மனிதரும் இன, பாலினம், தேசியம்,மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு உரிமைகளை அனுபவிக்க தகுதியானவர்கள் ஆவர். 


இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தில் கருப்பொருள் “சமத்துவம்“ என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், ‘அனைத்து மனிதர்களை சுதந்திரமாகவும், சமஉரிமைகளுடனும் கண்ணியமாகவும் பிறக்கிறார்கள்’ என்று உலகப் பிரகடனம் கூறுவதாக தெரிவித்தார். 

இந்த நாளில்  உலகம் ‘ஆரோக்கியமான சூழல் மற்றும் பருவநிலை நீதிக்கான உரிமை’ குறித்து விவாதிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர்  வலியுறுத்தினார். இயற்கையின் தரத்தைக் குறைப்பது பருவநிலையில் மீள முடியாத மாற்றங்களுக்கு வழி வகுத்துவிடும் என்று கூறிய அவர், ஏற்கனவே நாம் இதன் மோசமான தாக்கத்தைக் கண்டு வருகிறோம்.  தொழில்மயமாவதன்    மோசமான விளைவுகளிலிருந்து இயற்கை அன்னையை நாம் காப்பாற்ற வேண்டும் என நமது குழந்தைகளுக்கு நாம் போதிக் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கையைப் பாதுகாக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவது  மகிழ்ச்சி அளிப்பதாக  அவர் தெரிவித்தார்.


வரலாற்றில் மிக மோசமான பெருந்தொற்றுக் காரணமாக மனித குலம் பெரும் பாதிப்புக்குள்ளானதாக கூறிய குடியரசுத்தலைவர், அறிவியல், மற்றும் நட்புறவின் நம்பிக்கை காரணமாக உலகம் அதனை எதிர்கொண்டுள்ளது என்றார்.  உலகம் முழுவதும் பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், மோசமாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தியா பல்வேறு சவால்களுக்கு இடையே லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இலவச தடுப்பூசி  மூலம் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்