மகளிர் காவல் தன்னார்வலர்கள், மற்றும். மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கன்வாடி சேவைகள் திட்டம் அமைச்சர் தகவல்
மகளிர் காவல் தன்னார்வலர்கள்
மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களின் மகளிர் காவல் தன்னார்வலர்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த தன்னார்வலர்கள் துன்பத்திலிருக்கும் பெண்களுக்கு உதவ காவல் துறைக்கும் சமுதாயதத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்கள். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் தங்கள் மாநிலங்களில் இந்த முறையைப் பின்பற்ற முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் மகேந்திர கார் மற்றும் கர்நால் மாவட்டத்தில் இந்த முறையை நாட்டிலேயே முதல் தடவையாக பின்பற்றியுள்ளது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைஅமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் இத்தகலை எழுத்து மூலம் தெரிவித்தார்.அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கான விதிமுறைகள்
மத்திய அரசின் நிதியுதவியுடன், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அங்கன்வாடி சேவைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமிக்கின்றன. விதிமுறைகளின்படி நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் மாநில அரசு அமைத்துள்ள தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிப்படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதியாகும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயதாகும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை மத்திய அரசு அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.4,500-ம் மினி அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,500-ம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.2,250 மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
கருத்துகள்