கல்வி வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் மகள் முனைவர் உமையாள் இராமநாதன் காலமானார்

தமிழ்நாட்டின் பழைய இராமநாதபுரம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில்  கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக  பிறந்த கல்வி வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார்  இவரது ஒரே மகள் உமையாள் ஆச்சி இவரது கணவர் இராமநாதன் செட்டியார்


கல்விப்பணியில் இவரது தந்தை அழகப்பர் இலண்டனில் பாரட்லா பயின்ற அறிஞர் இவர் திருவாங்கூர் சமஸ்தான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கித் துவங்கியது. தான் முதல் கல்வி சேவை 

1947 ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று காரைக்குடியில் காந்தி மாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.

அப்போது இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலடாசம் ரூபாய் மதிப்புள்ள சிவகங்கை மன்னர் துரைசிங்க ராஜாவிடம் ரூபாய் 500 மூலம் கௌல் கிரையம்  300 ஏக்கர் பெற்ற  நிலப்பரப்பினை நன்கொடை அளித்து பெயர் பெற்றார் அதனால் தான் "கோடி கொடுத்தான் கொடை கொடுத்தான் " எனப் பாராட்டுவது கவியரசர்  நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை சோசலிச முதலாளி எனப் புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியில் மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை (CECRI) இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்தமது கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது. பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி

சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி

கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி

கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்

கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம் மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை

1948 ஆம் ஆண்டு புதுடில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை

1946 ஆம் ஆண்டு தக்கர் பாபா வித்யாலயாவில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை என இலண்டன் ரிட்டர்ன்ஸ் வள்ளல் அழகப்பர் மகள் தந்தை வழியில் இராமநாதன் செட்டியார் பள்ளி, உமையாள் இராமநாதன் பெண்கள் கல்லூரி என திறம்பட நடாத்தி வந்தார் அவரது மறைவு உண்மையான பேரிழப்பு தான். டாக்டர் உமையாள் ராமநாதன் காலமானார் இவர் பல்வேறு தலைப்புகளின் நன்மதிப்பு பெற்றவர்.

வள்ளல் ஆர்.எம். அழகப்ப செட்டியார் மகளும், ஆயுள்கால ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர்.உமையாள் ராமநாதன் இன்று மாலை சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் காலமானார் இவரின் ஒரே மகன் டாக்டர். ஆர்.எம். வைரவன் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து சென்னை வருகிறார். பலரும் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதிச் சடங்கு செட்டிநாட்டு முறையில் நடக்க உள்ளது.        காரைக்குடியின் அடையாளமும் பெருமையுமாய் விளங்கும் வள்ளல் அழகப்பரின் மகள் முனைவர். திருமதி.உமையாள் இராமநாதன் இறைவன் திருவடி அடைந்தார். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவியர்களின் கல்விக்காக வாரி  வழங்கிய வள்ளல் அழகப்பர் அவர்களது புதல்வியும், காரைக்குடி உமையாள் இராமநாதன் கலைக்கல்லூரியின் தாளாளர் திருமதி.உமையாள் இராமநாதன் அவர்கள் மறைவுக்கு பலர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்