திருநெல்வேலி அரசு உதவி பெறும் சாஃப்டர் பள்ளி வளாகத்திலுள்ள கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலி நால்வர் படுகாயம்

திருநெல்வேலி மாநகராட்சியின் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின்  வளாகத்திலுள்ள கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில்


இடைவேளை நேரத்தில் அதன் அருகில் நின்ற மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே மூன்று மாணவர்கள் உயிரிழந்தத நிலையில் நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. விபத்து நடந்ததும் பள்ளியிலிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சக மாணவர்கள் இறந்த ஆத்திரத்திலிருந்த பள்ளி மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைகளை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். பள்ளியில் இருந்த் பூந்தொட்டிகள் வீசி எறியப்பட்டதுடன் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது மாணவர்கள் ஆத்திரத்துடன் கத்தியபடியே வலம் வந்ததால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினார்கள்.ஆசிரியர்களாலும் மாணவர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுவரிடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு பெற்றோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதுடன் பதைபதைப்புடன் அங்குமிங்கும் ஓடினார்கள். தங்கள் குழந்தையைப் பார்த்ததும் சில பெற்றோர்கள் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். இதனிடையே பெற்றோர்கள் பலர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். விபத்தில் சிக்கிய மாணவர்கள் எட்டாம் வகுப்பில் படிக்கும் அன்பழகன், விஸ்வ ரஞ்சன், சுதீஷ்    என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்து நடந்ததற்குப் பள்ளி நிர்வாகம், கட்டடத்தை உரிய முறையாகப் பராமரிக்காததே காரணமென்று பெற்றோர்கள் குற்றம் சாட்டும் நிலையில்

கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக சுவர்கள்  மோசமான நிலையில் இருந்ததாகவும் கட்டடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கியதும் சுவர்கள் இடிந்து விழக் காரணமானதாகத் தெரிகிறது. இதற்கிடையே சிகிச்சையிலிருந்த ஒரு மாணவர் உயிரிழக்க பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்து. சம்பவம் நடந்த பள்ளியில் பதற்றம் நீடித்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன், ஆர். சுதீஷ் ஆகிய  மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


எம். இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் துயர சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுடன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இருந்தும் மாணவர்களைப் பறிகொடுத்த பெற்றோர் நிலை வேதனை தருவதாக அமைந்துள்ளது அவர்களது விபத்து புகைப்படங்கள் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் என்பதால் செய்தியில் தவிர்க்கப்பட்டது.பள்ளி சுவர் ஆடிக்கொண்டு இருந்ததாக ஏற்கனவே மாணவர்கள் புகார் தெரிவித்தும் நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்திருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான குற்றச்சாட்டாகும். கட்டிட ஸ்திரத்தன்மை, 

தீயணப்புத்துறை, சுகாதார அலுவலர்கள்

அனைவரும் பெற்ற கையூட்டு காரணமாக தனியார் பள்ளிகளின் அங்கிகாரம் ஆண்டு தோறும் நீட்டிக்கப்படுவதில்லை.

இந்தப் பள்ளியின் கட்டிட ஸ்திரத்தன்மைக்குச் சான்று வழங்கிய அலுவலர்கள் தான் முதல் குற்றவாளிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்