நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலவரம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தகவல்

நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலவரம்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2014 ஏப்ரல் முதல் இன்று வரை நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 91,287 கிலோமீட்டரில் இருந்து சுமார் 1,40,937 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானத் தரம் மற்றும் பணி முன்னேற்றத்தை கண்காணிக்கவும் சரிபார்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படுகின்றன. அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் காங்கிரஸ் விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களின்படி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டுள்ளன.


தரம் குறைந்த பணிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை திருத்தப்பட்டு விவரக்குறிப்புகளின்படி மீண்டும் அமைக்கப்படுகின்றன. ஒப்பந்தம்/சலுகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தர உத்தரவாதம்/கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதற்கான தினசரி மேற்பார்வைக்காக ஆணையத்தின் பொறியாளர்/சுயாதீனப் பொறியாளராக ஆலோசகர்களை நியமிப்பதன் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், தொடர்புடைய நிறுவனங்கள் மீது ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


2014-15 முதல் 2021-22 நிதியாண்டின் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், சுமார் 82,058 கிமீ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சுமார் 68,068 கிமீ நீள சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அமைச்சகம் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஏப்ரல் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு, அசாமில் ஒரு சுங்கச் சாவடி, சத்தீஸ்கரில் ஒரு சுங்கச் சாவடி, கர்நாடகாவில் ஒரு சுங்கச் சாவடி, கேராளாவில் நான்கு சுங்கச் சாவடிகள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு சுங்கச் சாவடி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எட்டு சுங்கச் சாவடிகளில் பொது நலன் கருதி பயனர் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளின் தற்போதைய கட்டண நீளத்தை மேம்படுத்த ராஜஸ்தானில் ஒரு சுங்கச் சாவடி மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரு சுங்கச் சாவடி மூடப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுங்கச் சாவடி மூடப்பட்டு, கட்டண நீளம் அருகிலுள்ள சுங்கச் சாவடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கழிப்பறை வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, டிசம்பர் 13, 2021 நிலவரப்படி, சுங்கச் சாவடிகளுக்கு அருகில் 833 ஆண்கள் மற்றும் 837 பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுங்கச் சாவடிககளில் போக்குவரத்து நெரிசலை அகற்றவும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் தேசிய மின்னணு கட்டண வசூல் அகில இந்தியா அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்