நீர்கோழியேந்தல் கல்லூரி மாணவர் மணிகண்டன் சாவில் பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில்


படிக்கும் மாணவர்  நீர்கோழியேந்தல் மணிகண்டனை காவல்துறை வாகன பரிசோதனையில் காவல் நிலையம் கூட்டிச் சென்று அடித்துக் கொன்ற கீழத்தூவல் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை கண்டித்து அந்த சமூக அமைப்பு சார்பில் போராட்டம் நடத்திய நிலையில்

குற்றம் இழைத்த நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்ய வலியுறுத்தி  மணிகண்டனின் மர்மமான உயிரிழப்புக்கு உரிய நீதி கேட்டு போராட்ட களத்தில் மருது சேனைத் தலைவர் கரு. ஆதிநாராயணத் தேவர் போராட்டம் நடத்திய நிலையில் மணிகண்டனின் மறு பிரேத பரிசோதனை முடிந்தது, மணிகண்டனின் உடல் 40 காவல்துறை வாகனங்களுடன் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இளைஞனின் உடல் மயானத்தில்

அடக்கம் செய்யப்பட்டது. மாணவர் மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதால் காவலர் மறித்ததாகவும் வண்டியை நிறுத்தாமல் போனதால் விரட்டி பிடித்ததாகவும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அதையே எழுதியும் வருகிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. மணிகண்டனுக்கு அன்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களோடு கொண்டாடியுள்ளனர். அவரது நண்பர் ஒருவர் மீது உள்ள வழக்கின் காரணமாக காவல்துறை அங்கு வந்துள்ளது. அதைக்கண்ட நண்பர்கள் ஓடி விட அங்கு  வாகனத்தில் நின்ற மணிகண்டனை இழுத்துச் சென்றுள்ளது  சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முடியாத கோபத்தை பழகியர்வர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எந்த தவறும் செய்யாத மணிகண்டன் மீது ஒட்டு மொத்தமாக இறக்கி வைத்து பாவம் செய்துள்ளனர் காவல்துறையினர். தானும் காவலராக தேர்ச்சி பெற்றுள்ளேன் என மணிகண்டன்  கூறியும் இரும்புக் கம்பிகள் கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தவறு செய்த நபர்கள் மீது தண்டனை தருவது விசாரணை நீதிமன்றம் தான் காவலர்கள் அல்ல இங்கு தண்டனை தவறே இழைக்காத ஒரு நபரை காவல்துறை தண்டிப்பதே மிகப் பெரிய தவறு. இதில் மரணம் நிகழும் அளவிற்கு தாக்கியுள்ளனர் எனில் எத்தனை வன்மம் நிறைந்திருக்கிறதோ.


பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் போல இன்னும் பல அரசியல் கட்சிகள் சுயநலம் காக்க  ஜாதிப் சங்கத்தின் போர்வையில் வாழும் எத்தனை எத்தர்கள் இனிமேல் வருவார் ஆனால் போராட்டத்தில் மருது சேனை ஆதிநாராயணன் மட்டுமே நின்றார் என்பது தான் வரலாறு .ஒருகாலத்தில் மிகப்பலம் பொருந்திய சமுதாய மக்கள் தற்போது மலுங்கிப்போன நிலையில் நீதி கேட்க சத்தியம் நிறைந்த சுயநலம் இல்லாத தலைவர் ஒருவர் அச் சமுதாய மக்கள் மெஜாரிட்டி நிலையில் இருந்தும் இல்லை காரணம் பல அதை விவாதிக்குமிடம் இச் செய்தித்தளம் அல்ல. காலம் கடந்த நீதி கிடைக்காத நீதிக்குச்சமம் அது ஜெய் பீம் சினிமா ஆகட்டும் மாணவன் மணிகண்டன் கொலை ? ! ஆகட்டும் கடவுள் தான் குற்றவாளிகளுக்குத்  தண்டனை தரவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்