ஓமிக்ரான் தமிழ் நாட்டில் 06.01.2022 ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் ஊரடங்கு

சர்வதேச அளவில் அமெரிக்கா, வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதையடுத்து மேற்கண்ட மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   


 ஓமிக்ரான், கொரோனா வைரஸ் என போட்டி போட்டுக் கொண்டு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த தேவையெனில் கட்டுப்பாடுகளை முன்னதாக மத்திய அரசு கூறியிருந்ததுஇந்த நிலையில் இது குறித்து பல்வேறு மருத்துவ ஆலோசகர்கள் என பல தரப்பிலும் ஆலோசனை செய்யப்பட்ட நிலையில், வரும் வாரத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை முழு லாக்டவுன் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது தமிழ் நாட்டில்  06.01.2022 ஆம் தேதி முதல்  இரவு நேரத்தில் ஊரடங்கு 

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை

மருத்துவம் தவிர, அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்று அறிவிப்புதமிழ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்குத்  தடை

பொதுப் பேருந்து, புறநகர் ரயில்களில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து என்று அறிவித்தார்


10,11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடையே தொடரும்ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து, மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்காது

ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியுண்டு
ஞாயிற்றுக்கிழமை, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம் தேவை.கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்து சேவைத் துறைகள் என, மக்கள் கூட்டாமாக கூடும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல இரவு நேர கட்டுப்பாடுகளின் போது ஊழியர்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் நிறுவனத்தின் அடையாள அட்டை, இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்