இந்திய சீன படை தளபதிகளுக்கிடையேயான 14-வது சுற்று பேச்சுவார்த்தை குறித்த கூட்டு செய்திக்குறிப்பு

இந்திய சீன படை தளபதிகளுக்கிடையேயான 14-வது சுற்று பேச்சுவார்த்தை குறித்த கூட்டு செய்திக்குறிப்பு


இந்திய சீன படை தளபதிகளுக்கிடையேயான 14-வது சுற்று பேச்சுவார்த்தை சீனப் பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை (எல்ஏசி) சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இரு தரப்பும் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன.அரசு தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, மீதமுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேற்கு பகுதி எல்லை கோட்டை ஓட்டி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இது உதவும் என்று குறிப்பிடப்பட்டது.


முந்தைய முடிவுகளை ஒருங்கிணைக்கவும், குளிர்காலம் உள்ளிட்ட பருவங்களில் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க பயனுள்ள முயற்சிகளை எடுக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவ மற்றும் ராஜாங்க வழிகள் மூலம் உரையாடலைப் பேணவும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.


இது தொடர்பாக தளபதிகளின் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்