2021-ல் உச்சத்தை எட்டிய தூர்தர்ஷன் புகழ்

2021-ல் உச்சத்தை எட்டிய தூர்தர்ஷன் புகழ்2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில் பிரசார் பாரதியின் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவை நாடெங்கிலும் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் வெளியிட்டு நேயர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

2021-ம் ஆண்டில் தூர்தர்ஷனின் அலைவரிசைகள் நாடு முழுவதும் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 2021-ம் ஆண்டில் தூர்தர்ஷன் அலைவரிசைகள் 680 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியின் யூடியூப் சேனல்கள் 2021-ல் 1 பில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த 94 மில்லியன் மணி நேரம் இவை பார்க்கப்பட்டுள்ளன.


தூர்தர்ஷனில் கொவிட்-19 தொடர்பான சமூக தகவல்கள் 95 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது. பல்வேறு மொழிகளில் செய்திகளை 356 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கொவிட் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் 43 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்