ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு முடிவுகள், 2021

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு முடிவுகள், 2021

நவம்பர் 21, 2021 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, 2021-ன் முடிவுகளின் அடிப்படையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் சரிபார்க்கப்படும் வரை இந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானது ஆகும். நேர்காணல்/ஆளுமைத் தேர்வின் போது வயது/வயது தளர்வு/பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், சமூக இடஒதுக்கீடு, உடல் குறைபாடு (பொருந்தினால்) போன்றவை தொடர்பான அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே, ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன், ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள முக்கிய அறிவுறுத்தல்களின்படி, சான்றிதழ்களின் தேவையை முன்கூட்டியே சரிபார்க்கவும், சான்றிதழ்களைத் தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் நேர்காணல்/ஆளுமைத் தேர்வின் அட்டவணை, உரிய நேரத்தில் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.


நேர்முகத் தேர்வின் தேதி விண்ணப்பதாரர்களுக்கு மின் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு ஆணையத்தின் இணையதளத்தை (https://www.upsc.gov.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்