முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய இளைஞர் தினம்-2022 புதிய இந்தியாவுக்கான வழிகாட்டும் ஒளி

சுவாமி விவேகானந்தர்: புதிய இந்தியாவுக்கான வழிகாட்டும் ஒளி' எனும் தலைப்பிலான வலையரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்தன.


சிறந்த மற்றும் வளமிக்க புதிய இந்தியாவை கட்டமைப்பதில் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களுக்கு முக்கிய பங்குண்டு என்று 'சுவாமி விவேகானந்தர்: புதிய இந்தியாவுக்கான வழிகாட்டும் ஒளி' எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் புவனேஸ்வர் ஏற்பாடு செய்த வலையரங்கில் பேசிய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

தேசிய இளைஞர் தினம்-2022-ஐ முன்னிட்டு ஒடிசா பிராந்திய நேரு யுவகேந்திரா சங்கத்துடன் இணைந்து இந்த வலையரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் புவனேஸ்வர் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. அகில் குமார் மிஸ்ரா, தன்னம்பிக்கை, இதயத்தை பின்பற்றுதல் மற்றும் நடப்பவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை சுவாமி விவேகானந்தரின் மூன்று முக்கிய போதனைகள் என்று கூறினார்.

பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சிந்தனையாளருமான திரு.பிஷ்ணு பிரசாத் நந்தா பேசுகையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே சுவாமி விவேகானந்தர் பாலம்  அமைத்தார் என்று கூறினார். "சனாதன தர்மத்தின் செய்தியை உலகத்திற்கு கொண்டு சென்ற அவர், பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாதிட்டார்," என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச சகோதரத்துவத்தை உலகெங்கும் சுவாமி விவேகானந்தர் போதித்ததாகவும் அவர் கூறினார்.

வளமிக்க புதிய இந்தியாவை உருவாக்குவதில் சுவாமி விவேகானந்தரின் வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் திரு. குரு கல்யாண் மொஹாபாத்ரா பேசினார். சுவாமி விவேகானந்தரின் போதனைகள் இன்றைக்கும் பொருந்தும். அவரது வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை நாம் பின்பற்றினால் புதிய இந்தியாவை நம்மால் கட்டமைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.


இளைஞர் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் கொள்கைகளை உருவாக்கி வருவதற்காக இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் எதிர்காலமாக உள்ள இளைஞர்களுக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது. விவேகானந்தரின் கொள்கைகளை அரசு சரியாக பின்பற்றுகிறது என்று அவர் கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அனைத்து ஊடக பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நேரு யுவகேந்திர சங்கத்தின் அலுவலர்கள் மற்றும் இளம் உறுப்பினர்கள் இந்த வலையரங்கில் பங்கேற்றனர்.சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“மகத்தான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அவருடையது. அவர் பல இளைஞர்களை தேசத்தைக் உருவாக்க உழைக்கத் தூண்டியுள்ளார். நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்”, என்று பிரதமர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, “எனது கனவு இந்தியா” மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள்” குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளைப் பிரதமர்  வெளியிட்டார். இந்த இரண்டு மையப் பொருட்களின் மீது 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து இவை தெரிவு செய்யப்பட்டன. புதுச்சேரியில்  ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரசால் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  திறந்தவெளி அரங்குடனானபுதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

“எனது கனவு இந்தியா” மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள்” குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார்

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம் மற்றும் திறந்தவெளி அரங்குடனான கலையரங்கம்- பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தைத் தொடங்கிவைத்தார்

“இந்தியாவின் மக்கள் தொகை இளமையாக இருக்கிறது, இந்தியாவின் மனநிலையும் இளமையாக இருக்கிறது. இந்தியாவின் ஆற்றலில், அதன் கனவுகளில் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியா அதன் சிந்தனைகளிலும் அதன் உணர்வுகளிலும் இளமையாக இருக்கிறது”

“இந்தியா அதன் இளைஞர்களை மக்கள் செல்வமாகவும் வளர்ச்சியை உருவாக்குபவர்களாகவும் கருதுகிறது”

“இந்தியாவின் இளைஞர்கள் கடுமையான பணிக்கான தகுதியையும் எதிர்காலம் பற்றிய தெளிவையும் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா இன்று சொல்வதை நாளைய குரலாக உலகம் கருதுகிறது”

“பழமையான நடைமுறைகளால் இளைஞர்களின் திறன் சுமையாகிவிடக் கூடாது. இப்போதைய இளைஞர்கள் தாமாகவும், சமூகத்தாலும் உருவாகி புதிய சவால்களை சந்திப்பார்கள்”

“இன்றைய இளைஞர்கள் “நம்மால் முடியும்” என்ற உணர்வைக் கொண்டிருக்கிறார்கள் இது ஒவ்வொரு தலைமுறைக்கும் ஈர்ப்பு சக்தி

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, “எனது கனவு இந்தியா” மற்றும் “இந்திய விடுதலை இயக்கத்தில் போற்றப்படாத நாயகர்கள்” குறித்து தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளைப் பிரதமர்  வெளியிட்டார். இந்த இரண்டு மையப் பொருட்களின் மீது 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து இவை தெரிவு செய்யப்பட்டன. புதுச்சேரியில்  ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்புதுச்சேரி அரசால் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  திறந்தவெளி அரங்குடனான கலையரங்கம்- பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர்  தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நாராயண் ரானே, திரு பானு பிரதாப் சிங் வர்மா, திரு நிதிஷ் ப்ரமாணிக், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய இளையோர் தினத்தன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுவாமி விவேகானந்தருக்குத் தலைவணங்கிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா நடைபெறும் இந்த ஆண்டில் அவரது பிறந்த நாள் அனைத்து வகையிலும் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றார். இதே ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் கூறினார். “இந்த இரு துறவிகளும் புதுச்சேரியுடன் தனித்துவ உறவைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.

பண்டைக்கால தேசத்தின் இளமைப் பண்புகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உலகம் தற்போது இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் பார்ப்பதாக கூறினார்.  ஏனெனில், இந்தியாவின் மக்கள் தொகை இளைஞர்களை அதிகம் கொண்டதாக இருப்பதால், இந்தியாவின் மனதும் இளமையாக உள்ளது என்றார்.  இந்தியாவின் திறமை மற்றும் அதன் கனவுகளில்  இளமைத் துடிப்பு காணப்படுகிறது.  இந்தியாவின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளும் இளமையாகவே உள்ளது.  இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவம் எப்போதும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதோடு அதன் பழமையிலும் புதுமை காணப்படுவதாக அவர் கூறினார்.  நாட்டில் இளைஞர்கள் தேவை ஏற்படும் நேரத்தில் சேவையாற்ற எப்போதும் தயாராக இருப்பார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  எப்போதெல்லாம் தேச உணர்வு பிளவுபடுகிறதோ, அப்போதெல்லாம் ஆதி சங்கராச்சாரியா என்ற ஒற்றுமை இழை மூலம் நாட்டை இணைக்க முன்வருவார்கள். கொடுமைக்காலங்களில் குரு கோபிந்த் சிங்கின் சாஹிப்ஜாடே போன்ற இளைஞர்களின் தியாகங்கள் தற்போதும் நமக்கு வழிகாட்டுகிறது.  இந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் தேவைப்பட்ட போது, பகத்சிங், சந்திரசேகர ஆசாத் மற்றும் நேதாஜி சுபாஷ் போன்ற புரட்சிகரமான இளைஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்க முன்வந்தனர்.  நாட்டிற்கு ஆன்மீக புத்துணர்வு தேவைப்படும் நேரங்களில் அரவிந்தர் மற்றும் சுப்பிரமணிய பாரதி போன்ற மகான்கள் நினைவுக்கு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய இளைஞர்கள் ஜனநாயகப் பண்புகளுடன் மக்கள் தொகை ரீதியான பங்களிப்பு கொண்டவர்களாக  இருப்பதோடு, அவர்களின் ஜனநாயக பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்தியா தனது இளைஞர்களை  மக்கள் தொகை அடிப்படையில் பங்களிப்பு வழங்கக்கூடியவர்களாகவும், வளர்ச்சி இயந்திரமாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.  தற்போது இந்திய இளைஞர்கள் துடிப்புமிக்க தொழில்நுட்ப ஆற்றல் பெற்றவர்வளாகவும், ஜனநாயக உணர்வுகள் கொண்டவர்களாக திகழ வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.  இந்திய இளைஞர்கள் கடினமாக  உழைக்கும் திறனை பெற்றிருந்தால், எதிர்காலத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனவேதான், உலகம் தன்னை எதிர்காலத்தின் குரலாக பார்க்கிறது என இந்தியா தற்போது கூறிவருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இளைஞர்களாக இருந்த தலைமுறையினர், நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கியதில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.  ஆனால் தற்கால இளைஞர்கள்  நாட்டிற்காக வாழ்வதுடன், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்.  இளைஞர்களின் திறமை மீது பழங்கால நடைமுறைகளை சுமத்தக் கூடாது, அவர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை தாம் அறிந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.    புதிய சவால்கள், புதிய கோரிக்கைகள் மற்றும் புதிதாக ஒன்றை உருவாக்கக்கூடியவர்களாக இளைஞர்கள் தனக்குத்தானேயும், சமுதாயத்தாலும் சுற்றிச்சுழன்று பணியாற்றலாம்.  தற்கால இளைஞர்கள் ‘சாதிக்க முடியும்’ என்ற உணர்வுடன் இருப்பதாக கூறிய பிரதமர், இது அனைத்து தலைமுறைக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றார்.

இந்திய இளைஞர்கள் தற்போது உலகின் வளமைக்கான குறியீட்டை எழுதி வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.  இந்திய இளைஞர் சக்தி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சூழலில் மதிப்பிடக்கூடியதாக உள்ளது.  இந்தியா தற்போது 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் வலிமை சூழல் முறையை  கொண்டதாக உள்ளது.  இதில் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் பெருந்தொற்று சவாலுக்கு இடையே உருவானவை.  புதிய இந்தியா- போட்டியிடு மற்றும் வெற்றி பெறு என்ற  தாரக மந்திரத்தை பிரதமர் வெளியிட்டார்.  அதாவது ஈடுபாட்டுடன் பணியாற்றி வெற்றி அடைய வேண்டும், ஒன்றுபட்டு போர்க்களத்தில் வெற்றி பெறு என்பது இதன் பொருள்.  ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் தடுப்பூசி இயக்கத்தில் இளைஞர்களின் செயல் திறனை சுட்டிக்காட்டிய பிரதமர், இது வெற்றியடைவதற்கான மன உறுதிக்கு ஆதாரம் என்பதோடு இளைஞர்களிடையே காணப்படும் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். 

இந்த அரசாங்கம் புதல்வர்களும் புதல்விகளும் சமமானவர்கள் என்று நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதை மனதில் வைத்துக்கொண்டு, புதல்விகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களின்  திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதல்விகளும் தங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும், அதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், இந்த பயணத்தில் இது மிக முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் தங்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாத பல போராளிகளை நாம் பெற்றுள்ளோம் என்று பிரதமர் கூறினார். இதுபோன்ற மாண்புமிகு மனிதர்களைப் பற்றி நமது இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ, ஆய்வுசெய்கிறார்களோ  அந்தளவுக்கு நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றார் பிரதமர். தூய்மைக்கான இயக்கத்தில் இளைஞர்கள் குரல் கொடுத்து பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய இளைஞர் விழாவானது இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைத்து தேசத்தை கட்டமைக்க, அவர்களை ஒன்றுபட்ட சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமூக ஒருங்கிணைப்பு,  அறிவுசார் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுவந்து, அவற்றை 'ஒரே பாரதம், ஒன்றுபட்ட பாரதம்’ என்ற ஒன்றுபட்ட திட்டத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...