தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம் 2022 தொடங்கியது.

தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம் 2022 தொடங்கியது.


தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் ஜனவரி 4 அன்று தொடங்கிய 2022-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2115 பேர் கலந்து கொள்கின்றனர்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குருபீர்பால் சிங் இதனை தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக குழுக்கள் மற்றும் இயக்குநரகங்கள் அளவில் நடைபெற்ற பல்வேறு சுற்றுக்களின் கடுமையான தேர்வுகளுக்கு பிறகு குடியரசு தின முகாம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நான்கு முதல் ஐந்து சுற்றுக்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ள ஒவ்வொருவரும் குடியரசு தினம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்

 மேலும் கொரோனா பெருந்தொற்றின் சோதனையான காலத்திலும் பயிற்சி நடவடிக்கைகளை தேசிய மாணவர் படை தொடர்ந்து மேற்கொண்டதாக கூறினார். ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் பயிற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நேரடி பயிற்சிகள் நிகழ்ந்ததாக கூறினார்.

2021-ம் ஆண்டில் தேசிய மாணவர் படையின் முக்கிய சாதனைகள் பற்றியும் லெப்டினன்ட் ஜெனரல் குருபீர்பால் சிங் எடுத்துரைத்தார். கொரோனா பெருந்தொற்றின் பொது முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தேசிய மாணவர் படையின் வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்