குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வரின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

குடியரசுத் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்


குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உதயமாகும் 2022-ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மகிழ்ச்சிகரமான புத்தாண்டான 2022-ல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டின் புதிய உதயத்தில், நம் அனைவரது வாழ்விலும் அமைதி, முன்னேற்றம், சகோதரத்துவம் ஆகியவற்றின் எழுச்சி புத்துயிர் பெறட்டும். நமது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள புத்தாண்டில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

புத்தாண்டான 2022, உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துபுத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“மகிழ்ச்சிகரமான 2022!

இந்த ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் அபரிமிதமான மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தட்டும்.

முன்னேற்றம் மற்றும் வளங்களைப் பெறுவதில் புதிய உச்சத்தை எட்டுவோம், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற மேலும் கடுமையாக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் இன்று முதல் மூடப்படுகிறது

கொவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் மாளிகை  சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்கு இன்று முதல் (ஜனவரி1,2022) அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, காவலர் மாற்ற நிகழ்ச்சியும் நடைபெறாது.தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புதிய வருடம் வாழ்த்துக்களில் "நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும். 


பேரிடரைக் கடந்து மக்கள்தொகை யாவரும் நலன் பெற்றிடும் ஆண்டாக 2022 அமைய விரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு நமது அரசின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்."எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்