வேளாண் சந்தை மேம்பாட்டுடன் இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் ஊக்கம் பெறுகிறது

வேளாண் சந்தை மேம்பாட்டுடன் இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் ஊக்கம் பெறுகிறது 


இந்திய மாம்பழங்களும், மாதுளையும் அமெரிக்காவில் சந்தை வாய்ப்பைப் பெறுகின்றன 2021 நவம்பர் 23 அன்று நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையேயான 12-வது வர்த்தகக் கொள்கை அமைப்பின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கும் அமெரிக்காவின் வேளாண் துறைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதைத் தொடர்ந்து 2022 ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி தொடங்கும். 2022 ஏப்ரல் முதல் மாதுளை ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு இணையாக அமெரிக்காவிலிருந்து செர்ரி பழங்கள் மற்றும் அல்ஃபால்ஃபா கால்நடை தீவனம் 2022 ஏப்ரல் முதல் ஏற்றுமதியாகும்.  இத்துடன் அமெரிக்காவின்  பன்றி இறைச்சிக்கு  சந்தை வாய்ப்பு வழங்க தயார் என இந்தியாவின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.  இதனை  இறுதிப்படுத்த  கையெழுத்திடப்பட்ட தூய்மைச் சான்றிதழைப் பகிருமாறு கோரப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்