மக்களுக்காக வீதிகள், அண்டை அயல் நட்புகளை வளர்த்தல் ஆகியவற்றின் வெற்றியாளர்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில், மக்களுக்காக வீதிகள் என்பதில் வெற்றி பெற்ற 11 நகரங்கள் அண்டை அயல் நட்புகளை வளர்த்தல் என்பதன் முதற்கட்டத்தில் வெற்றி பெற்ற 10 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்கள் இப்போது அடுத்த நிலைக்குள் சென்றுள்ளன. இவற்றின் திட்டங்கள் இனி நீடித்த முறையில் செயல்படுத்தப்படும். இந்த நிகழ்வின் போது மாற்றத்திற்கான மிதிவண்டிகள் மக்களுக்காக வீதிகள் என்பதன் இரண்டாம் கட்டத்தை அமைச்சகம் தொடங்கியது. ‘அண்டை அயல் நட்புகளை வளர்த்தல்: களத்திலிருந்து கதைகள்’ என்று பெயரிடப்பட்ட நூல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு.மனோஜ் ஜோஷி தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் உலகளாவிய மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பங்குதாரர் அமைப்புகளின் அலுவலர்கள் வெற்றி பெற்ற நகரங்களின் பிரதிநிதிகள் 100 பொலிவுறு நகரங்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களுக்காக வீதிகள் என்பதில் வெற்றி பெற்ற பெங்களூரு குரு கிராம் கொச்சி கோஹிமா, புனே, விஜயவாடா உள்ளிட்ட 11 நகரங்களை நடுவர் குழு ஒன்று தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது. இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திடமிருந்து ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு பெறும். இது குறித்து கூடுதல் தகவல்களை https://smartnet.niua.org/indiastreetchallenge/ என்ற இணையதளத்தில் காணலாம்.
அண்டை அயல் நட்புகளை வளர்த்தல் என்ற முன்முயற்சியில் பெங்களூரு, கொச்சி, ரூர்கேலா, வதோதரா, வாரங்கல், காக்கிநாடா உள்ளிட்ட 10 நகரங்கள் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர அகர்தலா, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திருவனந்தபுரம், ஐதராபாத் உட்பட 15 நகரங்கள் வெற்றி பெற்ற நகரங்களுக்கு இணையானவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்