திருச்சி லால்குடி ஆங்கரையில் கொவிட் தடுப்பூசி, தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

லால்குடி ஆங்கரையில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் – திருச்சி சார்பில் கொவிட் தடுப்பூசி, தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


லால்குடி ஆங்கரையில் மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருச்சி சார்பில் கொவிட் தடுப்பூசி, தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜனவரி 6 (வியாழன்) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், அறிமுக உரையாற்றிய திரு கே தேவி பத்மநாபன், இதுவரை இந்தியாவில் 148 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி டோஸ்கள், செலுத்தப்பட்டுள்ளன என்றார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 711 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் 10 கோடியே 87 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை தொழுநோய்ப் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் ஏ சாந்தி, காசநோய்ப்  பிரிவு துணை இயக்குநர் டாக்டர் எஸ் சாவித்ரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துவிஜயன், தூய்மை இந்தியா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆர் நந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு திட்டத்தின் தூய்மைக் காவலர்கள் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.  கொவிட் தடுப்பூசி மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்