முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை ஆவணங்கள் காப்பக பெண் ஊழியர் இலஞ்சக் குற்றம் காரணமாக பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர்களிடம் இலஞ்ம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற நிலையில்


கடந்த சில ஆண்டுக்கு முன்னர் திரு கணேஷ் மாவட்ட ஆட்சியராகப் பணி செய்த போது நமது இதழ் ஆசிரியர் தனது நில ஆவணங்கள் கேட்ட நிலையில் அதற்கு அன்றைய நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பெண் அதிகாரி உடந்தையாக இருந்த நிலையில் ஆவணங்கள் காப்பகத்தில் பணி செய்த ஊழியர் ஒருவர்  மற்றும் அவரது கை பானமாக செயல்பட்ட நத்தம் நகர நிலவரித் திட்டம்  ஆவணங்கள் பிரிவு டிராப்ட்ஸ் உமென் ஒருவர் ரூ 1,20,000 லஞ்சம் கேட்டு ரூபாய்  ஐந்தாயிரம் முன்பணமாக கூட்டு ஊழல் செய்து சிறை சென்ற ஊழியர் மற்றும் அந்த நேர்முக உதவியாளர் வேறு மாவட்டத்திற்கு மாற்றமான நிலையில் நடவடிக்கை இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை எடுத்தது அந்த செய்தி அப்போது ஆங்கில இதழில் வந்த இணைப்பு நமது வாசகர்கள் பார்வைக்கு   



          அது போலவே தற்போது மாவட்ட ஆவணங்கள் காப்பகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணங்களை வழங்கிய பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து, தற்போதய மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவணக் காப்பக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆவணவங்களின் நகலை பெறுவதற்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவின் மீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை மேற்கொண்டு, விண்ணப்பதாரருக்கு நகலை பெற உத்தரவு வழங்கப்படும் என்ற நிலையில், ஆவணக் காப்பகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரியும் நாகம்மாள் என்ற பெண் ஊழியர், இலஞ்சம் வெற்றுக்கொண்டு ஆணங்களை வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அவர் லஞ்சம் வாங்குவது போன்ற காணோளிக் காட்சி நேற்று மாலை சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. இலஞ்சப் புகாருக்கு உள்ளான பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு உத்தரவின் பேரில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஆவண காப்பாக பதிவறை உதவியாளரான நாகம்மாள் இலஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனை அடுத்து, நாகம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இருந்த போதிலும் மக்கள் இலஞ்சம் கொடுத்தாவது தங்கள் காரியம் முடிந்தால் சரி என்று நினைப்பது தான் இவர்கள் இப்படி வளரக் காரணமாக இருக்கிறது . மேலும் பலர் இப்படி இலஞ்சம் பெறும் நபர்கள் மீது ஊழல் தடுப்பு துறை மூலம் பிடித்துக் கொடுத்து விட பலர் துணிந்து செயல்பட்டால். இவர்கள் பயம் காரணமாக இலஞ்சம் பெறும் நிலை குறையும். மேலும் தற்போது நல்ல ஆட்சியர் வந்த காரணத்தால் இந்த ஊழல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பணி சிறக்க பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...