தலைமறைவான முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

முன்னால் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி இன்றிரவு சிறையிலடைக்க வாய்ப்பு?.


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம்..!அதிமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையிடம் இராஜேந்திரபாலாஜி வாக்குமூலமளித்தார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூபாய் .3.10 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளில் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, தலைமறைவான இராஜேந்திரபாலாஜியை, பல மாநிலங்களிலும் மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வந்தனர். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் இராஜேந்திர பாலாஜி உறவினர்கள் அவர்கள் செல்போன் எண்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.600 பேரின் தொலைபேசி சைபர் கிரைம் காவல்துறை சோதனை செய்து வந்ததில் தான் சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு இராஜேந்திர பாலாஜி போன் செய்துள்ளார். அப்போது அவரின் தொலைபேசி எண் சிக்னல் மூலம் இராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு காவல்துறை செல்லும் முன் அவர் தலைமறைவானார். ஆனால் இதை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .அவரின் காரை சிசிடிவி மூலம் சோதனை செய்து.. அவர் எங்கே செல்கிறார் என்று கண்டுபிடித்து. கடைசியாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கே ஒரு தனிப்படை சென்று அவரைக் கைது செய்தனர். கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி இன்று  காவல்துறையினரைப் பார்த்ததும் தப்ப முயன்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையின் வாகனத்தைப் பார்த்ததும் காரில் ஏறித் தப்ப முயன்றார். ஆனால் காவல்துறை அவரை சுற்றி நின்று கொண்டனர். அவரின் கார் அப்படியே வளைக்கப்பட்டதனால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. கடைசியில் காவலர்களிடம் அவர் சரணடையும் நிலை ஏற்பட்டது. அங்கே கைது செய்யப்பட்டவர் இன்று சென்னை அழைத்து வரப்பட இருக்கிறார்.

இதற்கிடையில் இணையதளம் மற்றும் மாவட்ட எஸ்பி மனோகரிடம் புகார் அளித்த 7 பேர், முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன், அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராஜசிம்மன் மற்றும் இருவரிடம் மதுரை சரக டிஜஜி காமினி, எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையின்ர் விசாரணை நடத்தினர். ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை, தர்மபுரி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேல், கார் ஓட்டுனர் ஆறுமுகம் ஆகியோரை அழைத்து வந்து விசாரித்தனர்.

இராஜேந்திரபாலாஜி ஓசூரிலிருப்பதாக தெரியவந்தது. அங்கும் சென்ற தனிப்படை விசாரித்தது. ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் அவர் கர்நாடகா மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்ததனால் தனிப்படை கர்நாடகாவுக்குச் சென்றது. அந்த மாநில காவல்துறையினர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் தங்கியிருந்த இராஜேந்திர பாலாஜியை  இன்று பிற்பகலில் சுற்றி வளைத்தனர். 

பின்னர் அவரைக் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகருக்கு அழைத்து வர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவியதாக காவல்துறையிடம் ராஜேந்திரபாலாஜி வாக்குமூலம் அளித்தார். விருதுநகர் மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இன்று இரவு சிறையில் அடைக்க உள்ளதாகவும் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்