பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்

பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகள் அறிமுகம்பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகளை, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு. பசுபதி குமார் பரஸ் மற்றும் இணையமைச்சர் திரு. ப்ரஹலாத்  சிங் படேல்  ஆகியோர் புதுதில்லி பஞ்சஷீல் பவனில் இன்று அறிமுகம் செய்தனர்.
ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் 10 பிராண்ட் உணவு பொருட்களை தயாரிக்க, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்புடன், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது.

இவற்றில் அம்ரித் பஃல் என்ற நெல்லி சாறு, கோரி கோல்டு என்ற மல்லி பொடி, காஷ்மீரி மந்த்ரா என்ற மசாலா ,  மது மந்த்ரா என்ற தேன், சோம்தானா என்ற ராகி மாவு, மற்றும் தில்லி பேக்ஸின் கோதுமை குக்கீஸ் ஆகியவை இன்று அறிமுகம் செய்யப்பட்டன.இதில் அம்ரித் பஃல் என்ற நெல்லி சாறு, ஹரியானா குருகிராமில் தயாரிக்கப்பட்டது. இதன் 500 மி.லி பாட்டில் விலை ரூ.120.

கோரி கோல்ட் என்ற மல்லி மவுடர் ராஜஸ்தானின் கோட்டாவில் தயாரிக்கப்பட்டது. இதன் 100 கிராம் பாக்கெட் விலை ரூ.34/-

காஷ்மீரி மந்தரா என்ற மசாலா….  100 கிராம் பாக்கெட் விலை ரூ.75.
மது மந்த்ரா என்ற தேன்… உத்தரப் பிரதேசம் ஷகரன்பூரில் தயாரிக்கப்பட்டது. இதன் 500 கிராம் பாட்டில் விலை ரூ.185.


தில்லி பேக்ஸ் கோதுமை பிஸ்கட்டுகள் தில்லியில் தயாரிக்கப்பட்டது. இதன் 380 கிராம் பாக்கெட் விலை ரூ.175.

சோம்தனா என்ற ராகிமாவு மகாராஷ்டிராவின் தானேவில் தயாரிக்கப்பட்டது. இதன் 500 கிராம் பாக்கெட்டின் விலை ரூ.60.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்