முக்கியமான பாதுகாப்பு சாதனங்களுக்கான தாதுப்பொருள் தேவையில் தற்சார்பை அடைய முயற்சி

முக்கியமான  பாதுகாப்பு சாதனங்களுக்கான தாதுப்பொருள் தேவையில் தற்சார்பை அடைய முயற்சி


நாட்டின் தாதுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்யவும், முக்கியமான & பாதுகாப்பு சாதனங்களுக்கான தாதுப்பொருள் தேவையில் தற்சார்பு அடையவும், மத்திய சுரங்க அமைச்சகம், தேசிய அலுமினிய நிறுவனம், இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் மற்றும் தாதுப்பொருள் ஆய்வுக் கழகம் போன்றவற்றுடன் இணைந்து KABIL என்ற பெயரில் கூட்டு  நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்த நிறுவனம் லித்தியம், கோபால்ட் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தாதுப் பொருட்கள் உள்ள நாடுகளைக் கண்டறிந்து, அந்த சுரங்கங்களை வாங்கும் பணியை மேற்கொள்ளும். 


     இதுபோன்ற நடவடிக்கைகள் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், மின்சார வாகனப்போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற முக்கியமான துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்