பள்ளி மாணவர்களை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிய திருப்பூர் மாவட்டத்தில் இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியையாக கீதா (வயது 51) பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி பள்ளி வளாகத்திலுள்ள கழிப்றையை பட்டியலின மாணவ-மாணவிகளை வைத்து சுத்தம் செய்யச் சொன்னதாகவும், சுத்தம் செய்ய மறுத்த மாணவ-மாணவிகளை ஜாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் தலைமை ஆசிரியையான கீதா மீது புகார் எழுந்ததையடுத்து தலைமை ஆசிரியை மீது திருப்பூர் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை செய்த பின்னர் தலைமை ஆசிரியை கீதாவை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில்.
தலைமை ஆசிரியை டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணகுமார் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையில் கீதா சென்னை உயர்நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கீதா திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்த தகவல் மங்கலம் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தலைமை ஆசிரியை கீதாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு சேர்த்தனர்.
கருத்துகள்