தமிழ் நாட்டில் இந்திய காவல் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு.

தமிழ் நாட்டில் இந்திய காவல் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு.


தமிழ் நாட்டில் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஐஜி யாக 14 பேரும் டிஐஜி-யாக 3 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, 13 பேர்களுக்கு பணியிடமாற்றமும் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருநெல்வேலி சரக டிஐ.ஜி யாக பிரவேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்


சேலம் சரக டிஐஜி யாக பிரவீன் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் சரக டிஐஜி., யாக ரூபேஷ்குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜி.யாக  ஆனி விஜயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் சரக டிஐஜி.,யாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாபு ஐ.ஜி. யாக  பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூகநீதி மற்றும் மனித உரிமைக் காவல் துறை ஐஜி யாக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துரைகுமார் ஐஜி யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர் காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஆசியம்மாள் ஐஜி யாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரு மாநகர் போக்குவரத்துக் காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொன்னி டிஐஜி யாக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகரில் காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மகேஸ்வரி ஐஜி யாக பதவி உயர்வு பெற்று தொழில் நுட்ப ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அமலாக்கப்பிரிவு ஐஜி யாக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி யாக லலிதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்