பன்முகக் கலாச்சார உணர்வைக் குறிக்கும் வகையில் பல்வேறு விழாக்கள் குறித்து பிரதமர் பதிவு

மகர சங்கராந்தி, உத்தராயண், போகி, மாக் பிகு, பொங்கல் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: 

இந்தியாவின் துடிப்புமிக்க பன்முகக் கலாச்சார உணர்வைக்  குறிக்கும் வகையில் பல்வேறு  விழாக்களை நாடு முழுவதும் நாம் கொண்டாடுகிறோம்.

மகரசங்கராந்தி தினத்தில் வாழ்த்துக்கள்

மிகச்சிறந்த உத்தராயணைப்  பெற்றிடுவோம்


அனைவருக்கும் போகி வாழ்த்துக்கள். இந்தத்  தனித்துவமான விழா நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வை மேம்படுத்தட்டும். நமது குடிமக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் நான் பிரார்த்திக்கிறேன்.


உங்கள் அனைவருக்கும் மாக் பிகு  வாழ்த்துக்கள். இந்த விழா ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் விரிவுபடுத்த நான் பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தில் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகப்  பொங்கல் திகழ்கிறது. இந்தச்  சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தில்  சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்