முகலாயத் தோட்டம் மார்ச் 16, 2022 வரை குடியரசுத் தலைவர் மாளிகையின் 35 ஆம் எண் நுழைவாயில் வழியாகவே பார்வையாளர்கள் அனுமதி
முகலாயத் தோட்டம் குடியரசு தலைவர் மாளிகையில்
மார்ச் 16, 2022 வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமை மற்றும் அரசிதழ் விடுமுறை தினமான மார்ச் 01, 2022 தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (கடைசி நபர் நுழைவு மாலை 4 மணி) பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேர அளவிலான 7 முன்பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகள் உள்ளன. கடைசி நபர் நுழைவு மாலை 4 மணியாகும். ஒவ்வொரு ஒருமணிநேரத்திற்கும் அதிகபட்சமாக 300 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். இந்த பயணத்தின் போது பார்வையாளர்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்பட வேண்டும். முகக்கவசம் அணியாத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் 35 ஆம் எண் நுழைவாயில் வழியாகவே பார்வையாளர்கள் உள்ளே சென்று வர வேண்டும். முன்பதிவு செய்வதற்கான இணைய தள முகவரி https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx.
கருத்துகள்