சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னையைச் சேர்ந்த முகமது யாசர் அராபத் (வயது32) என்ற பயணி துபாயிலிருந்து 11-ந் தேதி காலையில் வந்து சேர்ந்தார். நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அவரை இடைமறித்து சோதனையிட்ட போது, உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தைக்கப்பட்டிருந்த 990 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.44.25 லட்சமாகும்.
அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்