வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.47.73 லட்சம் மதிப்புள்ள 1.09 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து வந்த பயணிகளை பரிசோதித்தபோது பெண் பயணி ஒருவர் 971 கிராம் தங்கத்தை பசை வடிவில் உள்ளாடையில் தைத்து மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் பெண் பயணியை கைது செய்தனர்.
இதே போன்று கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகளை பரிசோதித்தபோது, ஆண் பயணி ஒருவர் 123 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. சுங்கச் சட்டம் 1962-ன்படி பறிமுதல் செய்யப்பட்ட இந்த 2 பேர் கடத்தி வந்த தங்கம் 47.73 லட்சம் மதிப்புள்ள 1.09 கிலோ கிராம் என சென்னை விமான நிலையத்தின் முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்