முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழ நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பர்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பொது ஆண்டு 1180 ல் தற்போதைய நாகபட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் கிராமத்தில் , 12 ஆம் நூற்றாண்டில், ஆதித்தன் பூஜகர் மகனாக ஒச்சன் என்ற உவச்சர்கள் குலப் பிரிவில் பிறந்தார்.

திருவெண்ணைநல்லூரிலுள்ள நிலக்கிளார் ஒருவரால் செல்வச், செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் உதவியுடன் அவ்விரு மொழிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்றவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது. அவருக்கு ஒரு மகன் அம்பிகாபதி, ஒரு மகள் காவேரி, அம்பிகாபதி மன்னர் மகளான இளவரசி அமராவதியை விருப்ப அவர் மன்னரால்  சிரச்சேதம் செய்யப்பட்டார். மகள் கினற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கம்பர் நாடு கடத்தப்பட்டார். இது மக்கள் பலர் அறியாத நிகழ்வு.

மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்குச் சென்றவர், மன்னரின் அன்புக் கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை மன்னருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவிச் சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரியான நிலங்களைப் பரிசளித்து, அதற்கு சர்வ மானியம் வழங்கி ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.


மன்னர் மகள் அமராவதிக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக கம்பர் நியமிக்கப்பட்டார். 

கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த இராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு மரபுவழிக் கவிதை நடைகள், சந்தம் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால கட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.


கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியதென்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்தவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாகவே அமைந்தது. வால்மீகி எழுதிய இராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில்.   11, ௦௦௦ சந்தங்களிருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் இராமாயணத்தில் பல இடங்களை மாற்றியமைத்துள்ளார்.           கம்பர் இராமாயணத்தினை எழுதிய பின்பு, அதனை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கத்தில் உள்ளோர்கள், தில்லை தீட்சதர்கள் ஒப்புக் கொண்டால் இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யலாம், இல்லையென்றால் வேண்டாமென்று கூறிவிடுகின்றனர். அதனால் கம்பர் தில்லை சென்றார். அங்கே தீட்சிதர்களாக இருக்கும் மூவாயிரம் நபர்களும் ஒன்று சேர்க்க இயலாமலிருந்த போது, ஒரு சிறிய குழந்தை இறந்தது. அந்தக் குழந்தைக்காக அனைத்து தீட்சிதர்களும் கூடி நின்றார்கள். அப்போது கம்பர் தன்னுடைய இராமாயணத்திலிருந்து நாகபாசப் படலம் என்ற பகுதியைப் பாடி குழந்தையை உயிர்ப்பித்தார். தீட்சிதர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தான் இயற்றிய இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் பெற்றார்.




திருவரங்கத்தில் உள்ளவர்கள் அரங்கேற்றத்திற்கு முன்பு சடகோபரைப் பாடும் படி கூறியமையால், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடினார். அதன் பின்பு இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் கம்பர். இராமாயண அரங்கேற்றத்துக்குப் பின் சோழன் கம்பனுக்கு விருந்து வைத்த நிகழ்வு. விருந்துக்குக் கம்பன் மகன் அம்பிகாபதியையும் அழைத்திருந்தார். அரசன் தன் மகளை விருந்து பரிமாறச் செய்தான். அம்பிகாபதி அவளைக் கண்டதும்  ஆவலில் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான்.


"இட்டடி நோவ எடுத்தடி கொப்புளிக்க

வட்டில் சுமந்து மருங்கசைய......."

என்று தொடங்கியதும் கம்பன் தன் மகன் நிலையை உணர்ந்துகொண்டான். அரசன் உணரும் முன்பே அதனை மறைக்க எண்ணிய கம்பர் பின் இரண்டு அடிகளைத் தான் பாடிப் பாடலை முடித்தார். 




"கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூறுவாள், எந்தை வழங்கோசை வையம் பெறும்."

என்றாலும் அரசன் புரிந்துகொண்டான். காதல் சுவை புலப்படாமல் அம்பிகாபதி 100 பாடல்கள் பாடினால் கம்பன் கூற்று உண்மை எனவும், பாடாவிட்டால் அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்படும் என்றும் ஆணையிட்டான். அம்பிகாபதி ஒப்புக்கொண்டு மறுநாள் அரசவையில் காதல்சுவை கலக்காத கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடினான். அவன் பாடியதை உப்பரிகையின் மேல் மறைவாகவிருந்து பார்த்துக்கொண்டிருந்த இளவரசி 99 பாடல் முடிந்ததும், காப்புச் செய்யுளையும் சேர்த்து எண்ணி 100 பாடல் முடிந்துவிட்டதாகக் கருதி மறைவிடத்திலிருந்து வெளிவந்தாள். அவளைக் கண்ட அம்பிகாபதி 100 பாடல் முடிந்துவிட்டதாகத் தானும் கருதி 100 ஆவது பாடலை இளவரசி அமராவதி மீது பாடிய

"சற்றே பருத்த மனமே குலுங்கத் தரளவடம் துற்றே அசையக் குழைஊசல் ஆட துவர்கொள்செவ்வாய்  நற்றேன் ஒழுக நடனசிங் கார நடையழகின்  பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே." என்பதாகும். உடனே மூன்றாம் குலோத்துங்க சோழன் தன் சேனாதிபதி மூலம்


அம்பிகாபதியின் தலையை துண்டிக்க ஆணையிட்டான். கம்பர் மன்னித்தருளும்படி மன்றாடினான். அரசனோ கேட்கவில்லை. அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட கம்பர் சோழர் குலம் அழிந்து போகும்படி சாபமிட்டுப் பாடல் பாடி:

"வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு

வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம் – வில்லம்பு

பட்டதடா என்மார்பில் பார்வேந்தா நின்குலத்தைச்

சுட்டதடா என்வாயிற் சொல்".

இந்தப் பாடலில் வரும் ‘ரெண்டு’ என்னும் சொல்லும், பாடல் நடையும் இது கம்பராமாயணத் தமிழ் அன்று என்பதைத் தெளிவாக்கும். எனவே இதனைக் கதை புனையக் கட்டிய பாடல் என்க. அதன் காரணமாக, மன்னர் கம்பரை நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில் கம்பரை படைவீரர்கள் சோழநாட்டின் எல்லையான நெடுங்குடி கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகில் கண் கட்டை அவிழ்த்து விட்டு செல்லவே, ஒருநாள் முழுவதும் கால் நடையாக நடந்து களைப்புடன், கவலையுடன்



கம்பனூர் அடைந்து விடவே பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஒற்றர்கள் தகவல் வரவே மன்னர் நாட்டரசன் கோட்டை அருகில் உள்ள தனது அழகாபுரி அரண்மனைக்கு வரவழைத்து விருந்தோம்பல் செய்து வேண்டிய உதவிகள் செய்து குருகுலம் அமைத்துத் தந்த நிலையில் சோழ நாட்டில் வாழ்ந்த கம்பர் சார்ந்த உறவு  உவச்சர்கள் கொடுமை தாளாமல் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர் அவர்களை ஆதரித்து அப்போது  பாண்டிய மன்னன்  உங்கள் குல வழக்கப்படி காளி மற்றும் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் அம்மன் ஆலயங்களில் பூஜை செய்து வர கோவில்களில் உரிமை வழங்கியதுடன்.

அவர்கள் மரியாதையுடன் பாண்டிய நாட்டில் நடத்தப்பட்டனர்... ஆனால் சோழநாட்டின் நிலை வேறானது.  அம்பிகாபதி கொல்லப்பட்டதும் இளவரசி அமராவதியும் சதி முறையில் இறந்து போனார் அதுவே இன்று வரை உலகம் பேசும் உவமையானது

மூன்றாம் குலோத்துங்க சோழன் மகனான விக்கிரமன் இராசராசன் ஆட்சிக்குப் பின்னர் மகன் அரசாளும் நேர் அரசபரம்பரை அழிபட்டுப் போனாலும் 100 ஆண்டுகள் கடந்து கழிந்த பின்னரே 1279-ல் சோழர்கள் ஆட்சி நிலை முடிவுக்கு வந்தது, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள்  தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் துவாரகசமுத்திரம் ஹெய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்துக் காத்திருந்தனர். மதுரையில்  தெற்கே "பாண்டியர்கள்" வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.






பொது ஆண்டு 1216 ல் சோழநாட்டின் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் பாண்டிய மன்னன் முதலாம்'மாறவர்மன் சுந்தரபாண்டியன்' தலைமையில் பாண்டியர்கள் 'கங்கைகொண்ட சோழபுரம்' மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கு கம்பர் சாபமும் ஒரு காரணம் என இன்று வரை கூறப்படுகிறது.






 கவி கம்பர் சொல்கிறார் இசையின்  வகைகளைப்  பற்றி .

”குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்

மழலை, அம் குழல் இசை, மகர யாழ் இசை,

எழில் இசை மடந்தையர் இன்சொல் இன் இசை,

பழையர் சேரியில் பொருநர் பாட்டு இசை.”

எனக்கு எப்போதும் ஒன்று மனதில் மிக ஆழமாக ஊடுருவல் செய்யும். காரணம்  

மார்கழியில் கசிந்து வரும் காலை 5 மணி பாடல்களும் எங்கள் காலத்தில் அத்தனை சுகமானது கதைகளும், கூத்தும் சிறப்பாக இருக்கும் அப்போது அந்தப் புகைப்படத்தில் பகுதி மக்களின் குரலும் தாளக் கட்டும் நம்மை மிரட்டும். இயல்பிலேயே பூர்வ குடிகளுக்கு இசையின் தன்மை அத்தனை லாவகமாக கை வரும். 


குறிப்பாக தோல் கருவிகளாகட்டும், கம்பிக் கருவிகள் ஆகட்டும் (தேவா, இராசா, வீரமணி, சுரேசு பீட்டர் எனப் பிரித்து எடுப்பார்கள். தமிழ் நாட்டின் எந்தப் பகுதியிலும் இது மாறாது. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய தெருக்கூத்துகளின் பின்னர் குறிப்பாக கானா பாடல்கள் 80-90-95 வரை தமிழகம்  முழுவது ஒலிக்காத மேடைகளே இல்லை.  தேவா அப்படி காசாக்கினார் கானா பாடல்களை. 



கவி கம்பன் சொல்கிற  முக்கியமாக முதல் வரியைக் கவனித்தீர்களா அதாவது முடிகளைக் கட்டாதீர்கள் என்று பேசித் திரியும் குழுக்களுக்காக இந்த கம்பனின் வரிகள் பதிலாக உள்ளது.       சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஊராகும். கவி கம்பர் தன் நிறைவுக்காலத்தினை இவ்வூரில் கழித்தார் என்பது வரலாறு. அவர் நினைவிடம் இவ்வூரின் அருகில் இருக்கிறது. அழகான பசுஞ்சோலைக்குள் கவி கம்பர் அவர் கவித்துமாய் நிற்கிறார்.

அவரது நினைவிடத்தில் உள்ள இக்கோயிலில் மண்ணெடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் படிப்புவரும் என்று இவ்வூர் வட்டாரத்தினர் கருதுகின்றனர்.   பிறந்த குழந்தைக்கு சேனையிடுதல் இங்கு உண்டு.      

ஈடு இணையற்ற கவிச்சக்கரவர்த்தியான கம்பர் தனது 70 ஆம் வயதில் 1250 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். கம்பர் சோழநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த பின்னர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பூவந்திச்சோழனால் பாதிப்புக்கு உள்ளான காரணமாக சோழநாட்டின் மகுட வைசியர் வழி நாட்டுக்கோட்டை நகரத்தார் பாண்டிய நாட்டில் புலம் பெயர்ந்த நிகழ்வு நடந்தது.

கம்பர் இந்த உலகிலிருந்து மறைந்தாலும் அவரது படைப்புகள் இன்னும் மறையவில்லை . தமிழ்மொழி எவ்வாறு தொன்மையாக உள்ளதோ அதேபோன்று கம்பரின் படைப்புகளும் என்றும்



நிலைத்திருக்கும் என்பதில் துளிகூட ஐயமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த