பட்டதாரிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி, கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார் .
நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொள்வதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வது தன்னார்வமானது.
பணி சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக தேசிய பணி சேவை (என்சிஎஸ்) திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வேலை தேடுதல் மற்றும் பொருத்துதல், பணி ஆலோசனை, தொழில்சார் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு பாடப்பிரிவுகள் பற்றிய தகவல்கள் போன்றவை இவற்றில் அடங்கும். தேசிய பணி சேவை இணையதளத்தில் (www.ncs.gov.in) இச்சேவைகள் ஆன்லைனில் கிடைக்கும்நகர்ப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு
அகில இந்திய அளவில் காலாண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு ஆய்வை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2021 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு காலத்தில் பொருளாதாரத்தின் 9 தேர்வு செய்யப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டில் 3.08 கோடியாக இருந்தது. 2013-14 ஆம் ஆண்டில் 6-வது பொருளாதார கணக்கெடுப்பின்படி இத்துறைகளில் மொத்தம் 2.37 கோடியாக வேலைவாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 9 துறைகளில் உற்பத்தித் துறையில் 39 சதவீதமும், கல்வித்துறையில் 22 சதவீதமும், சுகாதாரம், ஐடி துறைகளில் தலா 10 சதவீதமும், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 4.6 சதவீதமாக உள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் இத்தகவலை தெரிவித்தார்.
கருத்துகள்