குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006’-ஐ அரசு இயற்றியுள்ளது. முழு மாநிலத்திற்கோ அல்லது அதன் குறிப்பிட்ட பகுதிக்கோ ஒரு அதிகாரியையோ அல்லது அதிகாரிகளையோ 'குழந்தை திருமணத் தடுப்பு அதிகாரிகளாக' நியமிக்க மாநில அரசுக்கு இது அனுமதி அளிக்கிறது.
குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை திருமணத் தடுப்பு அதிகாரிகள் ஆற்ற வேண்டிய செயல்பாடுகளையும் இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களின் மேற்பார்வையின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களால் பராமரிக்கப்படுகின்றன
கூடுதலாக, விழிப்புணர்வு இயக்கங்கள், ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்வதோடு, இந்த தீய நடைமுறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குகிறது.
மேலும், ‘மகள்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம்’ திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. பாலின சமத்துவம் மற்றும் குழந்தை திருமணங்களின் தீய விளைவுகள் குறித்து பெண்கள் இடையே மற்றும் சமூகத்தில் பெருமளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும் சிக்கலில் உள்ள குழந்தைகளுக்கான அவசரகால 24 மணி நேர உதவி எண்ணாக 1098-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதுகுழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
நாட்டில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுக்க குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், குழந்தைக் கடத்தல் அதிகம் நடைபெறும் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அசாம், மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் திரிபுராவில் மாவட்ட அளவிலான ஒருநாள் பயிலரங்குகள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்கள் கொவிட்-19 பொதுமுடக்கத்துக்குப் பிறகு தேசிய அளவிலான ஆலோசனைகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதே போன்று குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் இந்த ஆணையம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 35 இணையவழிக் கூட்டங்களை நடத்தியிருப்பதுடன், அக்சய திருதியை தினத்தன்று குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டம்: தமிழகத்தில் சாலையோரம் வசிக்கும் சிறார்கள் குறித்த தகவல்கள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசின் 'குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம்' - மிஷன் வாத்சல்யாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக நிதியுதவி, மானியம், ஆலோசனைகள், பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. திட்டத்தை அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்துகின்றன.
பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 அன்று உள்ள தரவுகளின்படி நாடு முழுவதும் 5401 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 4148 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 396 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 9945 ஆகும்.
பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 படி உள்ள தரவுகளின் படி தமிழ்நாட்டில் 134 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 43 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 14 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆகும்குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கு முறையான கண்காணிப்பு நடைமுறை
குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகள் விஷயத்தில் முடிவெடுக்க சிறார் நீதிச்சட்டம் 2015- (பிரிவுகள் 27-30)ன்படி குழந்தை நலக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க தேசிய / மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்
மத்திய நிதியுதவியுடன் கூடிய வத்சல்யா இயக்கத்தின் மூலம், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற கல்வி, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு, சுகாதாரக் கவனிப்பு மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்
கருத்துகள்