முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்தாவது உலக பகவத் கீதை மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரை

மன நலம் தொடர்பான அனைத்து விஷயங்களையும், முழுமையான வகையில், சமாளிப்பதற்கு நாம் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும்: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு


ஐந்தாவது உலக பகவத் கீதை மாநாட்டில் பங்கேற்க நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்காவைத் தளமாக கொண்ட நிறுவனமான வடஅமெரிக்காவின், உள்மனத் திறன்கள் மேம்பாட்டுக்கான மையம், இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றி குறிப்பிட நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் உலகளவில் பரவியிருப்பதையும், அங்கீகாரத்தையும் இது எடுத்துரைக்கிறது.

இந்த வருடாந்திர நிகழ்வுக்கு ஊக்கமளிக்கின்ற உந்துசக்தியாக விளங்குகின்ற பூஜ்ய ஸ்வாமி பூமானந்த தீர்த்தா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பகவத் கீதையின் கருத்து பல ஆயிரமாண்டுகள் பழமையானதாக இருப்பினும் அதன் தன்மையை அல்லது அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் கொவிட்-19 பெருந்தொற்றால் முன்னெப்போதும் காணாத இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கான மையப்பொருளாக ‘மன ஒருமை’ என்பது மையப்பொருளாக இருப்பது மிகவும் பொருத்தமானது, காலத்திற்குரியது. மன ஒருமை பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும், மனஅழுத்தத்திலிருந்தும் விடுபட மிகவும் இன்றியமையாததாகும்.

பெருந்தொற்று  மக்களின் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதில் வியப்பு ஏதுமில்லை. மக்களின் மன நலத்தில் அக்கறை கொண்டு, நாடு முழுவதும், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய இலவச தொலைதூர-மனநல திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது, மக்களின் மனநல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும். குறிப்பாக, அடையாளத்தை வெளியிடாத, தொலைதூரங்களில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

மன நலம் தொடர்பான அனைத்து விஷயங்களையும், முழுமையான வகையில், சமாளிப்பதற்கு நாம் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம், அதனுடன் தொடர்புடைய களங்கத்தை  ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சம அளவிலான முக்கியத்துவம் ஆகும்.

படிப்பால் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக, அவற்றைச் சமாளிக்க முடியாமல்,  இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. இந்த இடத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. கல்வியின் அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க, ஆலோசனைகளை வழங்கித் தேற்றுவதில், அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், உள் ஆலோசனை வழங்குவோரை நியமித்து, மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட உதவ வேண்டும்.

ஆன்மீகம் என்பது ஒருவரது உள்மனதின் வலிமையையும், மன அமைதியையும் கண்டறிய மிகவும் அவசியமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விஷயத்தில், ஆன்மீகத்தை இளைஞர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என ஆன்மீக தலைவர்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அவர் ஆற்றிய முழு உரை:

உலக பகவத் கீதை மாநாட்டில் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்த்திய உரை


சகோதர, சகோதரிகளே,

ஐந்தாவது உலக பகவத் கீதை மாநாட்டில் பங்கேற்க நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்காவைத் தளமாக கொண்ட நிறுவனமான வடஅமெரிக்காவின், உள்மனத் திறன்கள் மேம்பாட்டுக்கான மையம், இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றி குறிப்பிட நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் உலகளவில் பரவியிருப்பதையும், அங்கீகாரத்தையும் இது எடுத்துரைக்கிறது.

இந்த வருடாந்திர நிகழ்வுக்கு ஊக்கமளிக்கின்ற உந்துசக்தியாக விளங்குகின்ற பூஜ்ய ஸ்வாமி பூமானந்த தீர்த்தா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

சகோதர, சகோதரிகளே,

குருஷேத்ராவின் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கும் அவனது மதிப்புமிகு நண்பர் தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையேயான உரையாடல் தெய்வீகத் தன்மை கொண்டது. தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை திறமையுடனும், போர்க்களத்திற்கு தேவைப்படும் உத்திகளுடனும் செலவிட்ட இயற்கையிலேயே திறனும், அறிவாற்றலும் கொண்ட அர்ஜுனன், மகாபாரதப் போரின் முதல் நாளிலேயே சந்தேகத்தின் படியால் முரண்பாடு கொண்டான்.

எதிர்க்கும் படையின் ஒரு பகுதியாக தமது சொந்த சகோதரர்களும், தாம் மிகவும் நேசிக்கின்ற குருக்களும் மதிப்புமிக்க மூத்தவர்களையும் காண்பதால் அர்ஜுனனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. எதிரியின் படைகளை அவன் ஆய்வு செய்த நிலையில், தமது சொந்த உறவுகளையும், மக்களையும் கொல்கின்ற யுத்தம் பயனற்றது என்ற ஐயத்தை அவனது மனம் உருவாக்கியது. இந்த விரக்தியின் காரணமாக போரில் ஆர்வமிழந்து திரும்பிச் செல்ல நினைத்தான்.

அப்போது அவனது சாரதியும் அவன் பக்கத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணன், அர்ஜுனனின் மனம் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும், சந்தேகத்திற்கும் பதிலளித்து  வழிகாட்டினார்.

ஸ்ரீ கிருஷ்ணனின் தெளிவான பார்வையும், கண்ணோட்டங்களும் அர்ஜுனனை அவனது விரக்தியிலிருந்து மீட்டது. அதிலிருந்து மீண்டு திரும்பிய பின் தீவிரமான செயல்பாட்டில் இறங்கினான். அவனது மனதிலிருந்த சந்தேகங்களை விட்டொழித்தான். தர்மத்தின் கடமைகளை நிறைவேற்ற அர்ஜுனன் துணிவுடன் முன்வந்தான்.

சகோதர, சகோதரிகளே,

பகவத் கீதையின் கருத்து பல ஆயிரமாண்டுகள் பழமையானதாக இருப்பினும் அதன் தன்மையை அல்லது அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை. அது இப்போதும் வற்றாத வழிகாட்டியாகவும் மக்களுக்கு உந்து சக்தியாகவும் நீடிக்கிறது. சிக்கலான ஒன்றோடொன்று இணைந்த உலகத்தில், மக்கள் தங்களின் வாழ்க்கை எண்ணற்ற சவால்களையும், தடைகளையும் எதிர்கொள்ளும் காலத்தில் முன்னெப்போதையும் விட இன்று பகவத் கீதையின் காலம் கடந்த கருத்து பொருத்தமாக விளங்குகிறது.

நெருக்கடியான காலத்தில் பகவத் கீதை போன்ற புனித நூல்கள் வழிகாட்டுதலைத் தருகின்றன. மனஅமைதியை மீட்க உதவுகின்றன. பலம் மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக அவை விளங்குகின்றன. சிக்கலான தருணங்களில், நமக்கு முன்னேறிச் செல்ல வழிகாட்டுகின்றன.

சகோதர, சகோதரிகளே,

உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் கொவிட்-19 பெருந்தொற்றால் முன்னெப்போதும் காணாத இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கான மையப்பொருளாக ‘மன ஒருமை’ என்பது மையப்பொருளாக இருப்பது மிகவும் பொருத்தமானது, காலத்திற்குரியது. மன ஒருமை பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும், மனஅழுத்தத்திலிருந்தும் விடுபட மிகவும் இன்றியமையாததாகும்.

துரதிர்ஷ்டவசமாக நவீன காலத்தில் மனஅழுத்தம் என்பது அனைத்து இடங்களிலும் பரவியிருக்கும் அம்சமாக உள்ளது. எனவே சிக்கலான சுகாதார பிரச்சனைக் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாக உள்ளது.  ஏழு இந்தியர்களில் ஒருவர் மனபிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்  பிரபலமான சுகாதாரம் குறித்த சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் மன நலம் தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரிய இடைவெளி இருப்பதையும் அந்த செய்தி வெளிப்படுத்தியது.

மனஅழுத்தம் போன்ற சுகாதாரப் பிரச்சனைகள் பரவலாக உள்ளபோதும் மனநலம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. துரதிருஷ்டவசமாக இதனுடன் தொடர்புடைய தவறான கருத்து பிரச்சனையை மோசமாக்குகிறது.

பெருந்தொற்று  மக்களின் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதில் வியப்பு ஏதுமில்லை. மக்களின் மன நலத்தில் அக்கறை கொண்டு, நாடு முழுவதும், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய இலவச தொலைதூர-மனநல திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது, மக்களின் மனநல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும். குறிப்பாக, அடையாளத்தை வெளியிடாத, தொலைதூரங்களில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

சகோதர, சகோதரிகளே,

மன நலம் தொடர்பான அனைத்து விஷயங்களையும், முழுமையான வகையில், சமாளிப்பதற்கு நாம் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம், அதனுடன் தொடர்புடைய களங்கத்தை  ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சம அளவிலான முக்கியத்துவம் ஆகும். அனைத்திற்கும் மேலாக, பொது உரையாடல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும். இந்த முக்கியமான பொது சுகாதார விஷயத்தில், மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க அனைத்து துறைகளையும் சார்ந்த பிரபலமானவர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்.

கடைசியாக, நமது வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளைக் களைவதற்கான அம்சத்தை நாம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.நவீன வாழ்க்கை ஏற்படுத்தியுள்ள அழுத்தங்களில் இருந்து சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியமாகும். இதன்மூலம், மக்களின் நலத்திற்கான,சமன்பாடான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். தியானம், முறையான உடற்பயிற்சி, யோக பயிற்சி  அல்லது இசை கேட்பது போன்ற நடவடிக்கைகள் மன அழுத்தத்தை குறைத்து, அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியைத் தரும் விஷயங்களாகும் என்பது இப்போது அனைவரும் அறிந்ததே. உண்மையில் அவை, நமது மனதை லேசாக்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவும்.  

நண்பர்களே,

படிப்பால் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக, அவற்றைச் சமாளிக்க முடியாமல்,  இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. இந்த இடத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. கல்வியின் அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க, ஆலோசனைகளை வழங்கித் தேற்றுவதில், அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், உள் ஆலோசனை வழங்குவோரை நியமித்து, மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட உதவ வேண்டும். தேவைப்படும் இடங்களில், அரசும் இதற்கு உதவ வேண்டும்.  மாணவர்கள் எந்தத் துன்பத்தையும் அச்சமின்றி எதிர்கொண்டு, முடிவைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் கடமையை செய்யும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பகவான் அளித்த உபதேசத்தின் சாரம் இதுதான். கிருஷ்ண பகவானின் போதனையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, நமது வாழ்க்கையை ஒருமுகப்படுத்த வேண்டும்.

ஆன்மீகம் என்பது ஒருவரது உள்மனதின் வலிமையையும், மன அமைதியையும் கண்டறிய மிகவும் அவசியமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விஷயத்தில், ஆன்மீகத்தை இளைஞர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என ஆன்மீக தலைவர்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பகவத் கீதையின் போதனைகளை பரப்ப மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நான் சுவாமி பூமானந்தா தீர்த்தா அவர்களையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம், மன அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது பாராட்டத்தக்கதாகும்.

சகோதர, சகோதரிகளே,

கடைசியாக, பகவத் கீதையின் தெளிவான அறிவு மனித குலம் முழுவதற்கும் பெரும் பயனை அளிக்கும் என நான் கூற விழைகிறேன். இதனை எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து இந்த அரும்பணியை பரப்ப வேண்டும்.

நமது நாகரிகத்தின் ஞானத்தை உலகத்துடன் நாம் எப்போதும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அதை நாம் தொடர வேண்டும். நான் அடிக்கடி கூறுவதைப் போல, பகிர்தல் மற்றும் கவனித்தல் என்பது இந்திய தத்துவத்தின் முக்கிய அம்சமாகும். சிஐஆர்டி-என்ஏ போன்ற அமைப்புகள் உலக பகவத் கீதை மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்த தத்துவ பொக்கிஷத்தை உலகம் முழுவதும் பரப்பி வருவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாநாட்டில் பங்கேற்றது குறித்து மீண்டும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக பகவத் கீதை ஐந்தாவது மாநாடு வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன். அடுத்த மூன்று நாட்களில் நடக்கும் உரைகள் மற்றும் விவாதங்கள் கற்பித்து. ஒளியேற்றி ஒவ்வொருவரின்  உள் அமைதிக்கான தேடலை ஊக்குவிக்கும்  என்று  நான் நம்புகிறேன். நன்றி. வணக்கம்.   ஜெய் ஹிந்த்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...